உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இளங்குமரனார் தமிழ் வளம்

வடநாட்டுச் செலவு :

228

அடிகளார் கட்டற்ற உரிமை வாழ்வால், கருதும் இடங்களுக்கெல்லாம் சென்று பொழிவாற்றவும், திருக்கோயில் வழிபாடாற்றவும் வாய்த்தது! தமிழகம் தழுவிய அளவில் அவர்கள் திருவுலாமுன்னரே நிகழ்ந்திருந்தாலும் வடநாட்டுச் செலவுக்குப் பேராசிரியப் பணி இடந்தந்திலது. அக்காலப் போக்குவரவு நிலையும் விரைந்து மீள்தற்கு வாய்ப்பிலதாய்த் தகைந்தது. அதனால், முழு விடுதலை பெற்ற அடிகள் நோக்கு வடபால் செலவை நாடிற்று.

21-3-1913 இல் சென்னையினின்றும் கிளர்ந்து விசயவாடா, தவளேசுவரம், பூரி, புவனேசுவரம் ஆகிய இடங்களைக் கண்டும் வழிபட்டும் 4-4-1913 இல் கல்கத்தா நகரை அடைந்தார். ஆங்குப் பேலூர் மடம், தட்சிணேசுவரம் கோயில் ஆகியவற்றை வழிபட்டார். கல்கத்தாவில், 'திருஞானசம்பந்தர்' சாங்கியமும் சைவ சித்தாந்தமும் என்னும் பொருள்களைப்பற்றி முறையே தமிழிலும், ஆங்கிலத்திலும் சொற்பொழிவாற்றினார். அன்பர்களைக் கூட்டி அங்கே 'சன்மார்க்க சபை' ஒன்றையும் நிறுவினார். (4-5-1913) அதன்பின் தார்சிலிங்குக்குச் சென்றார்.

அடிகள் சென்ற நேரம் மாலைப்பொழுது; பனிமலை

அடிப்பகுதி அது; குளிர்வாடை தாக்கத் தொடங்கியது. அடிகள் எதிர்பார்த்தவர் அங்கே எய்தினார் அல்லர்! என் செய்வார் திருவருளை நினைந்து நின்றார் அடிகள் நடுங்கும் நடுக்கத்தையும் எவரும் துணையில்லா நிலையையும் கண்டு அங்கு உலாவந்த இருவர் தம் உறைவிடத்திற்கு அடிகளை அழைத்துச் சென்றனர். பெருவளமான மாளிகை நல்ல உணவு - வெதுப்பி ஏற்பாடு இனிய கலந்துரை பாடல் எல்லாமும் வாய்த்தன! அவ்வில்லத்தவர்களும் அவர்கள் உறவினர்களும் அடிகளின் புலமை நலம் கண்டு மகிழ்ந்து வழிபட்டும் மெய்ப்பொருள்பற்றிக் கேட்டறிந்து பெருமகிழ்வுற்றனர்! அவர்கள் செய்த தொண்டும், ஆர்வ தளிர்ப்பும் வழிபாடும் அடிகளைத் 'திருவருள் மாண்பு ஃது என உணருமாறு செய்தன.'

இரவு எய்தியது; தண்ணிலா வெண்ணிலா ஒளியை வாரி வழங்கியது; பனிமலை மேல் அவ் வெண்ணிலா அருவிப் பொழிவைக் கண்ணாடிப் பலகணி வழியே கண்டு கண்டு கழிபேருவகை எய்தினார் அடிகள். நெட்ட நெடுந்தொலைவில் திகழும் கயிலாயக் காட்சியில் தம்மை மறந்த இன்பத்தில்