உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

49

முகத்தாற் காணப்படுதல்போல, நமதினிய தமிழ்நாட்டிலும் அங்ஙனம் ஒரு சிறப்புக் காணப்படாக் குறையை நிரப்பும் பொருட்டாகவும் இக் கல்விக் கழகம் இவைகளின் க்

சைவின்

மேல் அடிகள் திருப்பெயரை ஏற்று மறைமலையடிகள் கல்விக் கழகம் என்னும் பெயரால் சென்னையை அடுத்த பறங்கி மலையில் 1930 இல் அடி யேனால் தொடங்கப்பெற்றது. இது தொடங்கப்பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இக் கழகம் நம் தமிழ்மொழிக்கும் முக்கியத்துக்கும் நாகரிக வாழ்க்கைக்கும் அடிகள் நோக்கங்களைப் பின்பற்றி உறுதொண்டு செய்யும் உறுதியுடைவர் என்பது அது. இதனைக் கண்ட அடிகளார்,

'ஓம் சிவம்' பல்லாவரம் 9-7-1932

அன்புமிக்க தி.சு.பாலசுந்தரன் என்னும் இளவழகற்குத் திருவருளால் எல்லா நலங்களும் உண்டாகுக எமது பெயரால் நீ ஒரு கல்விக்கழகம் வைத்து நடத்துவதைவிட தமிழன்னையின் பெயரினாலே அதனை நடத்துவதே சிறந்ததாகும். என்றாலும், எமது பெயரின் தொடர்பு அக்கழகத்திற்கு இருக்கவேண்டு மென்று நீ வற்புறுத்தி வேண்டுதலால் நின்னன்பின் பொருட்டு அவ்வாறு நீ செய்தற்கு இசைகின்றோம். இங்ஙனமாக நீ வைத்து நடத்தும் 'மறை மலையடிகள் கல்விக்கழகம்' என்பதற்கு 'எமது பெயரின் தொடர்பைத் தவிர வேறு ஏதொரு தொடர்பும் எமக்கும் இல்லை என்பதை இதனால் அறிவிக்கின்றேன். அதன் பொருட்டு நீ பிறரிடமிருந்து திரட்டும் பொருளும் இதனைச் செலவிடும் பொறுப்பும் எல்லாம் நினக்கே உரியன. நலம்.

அன்புள்ள, மறைமலையடிகள்

என மறுமொழி விடுத்தார். அழகரடிகளார் பேரன்பும், நம் அடிகளார் வாழ்வியல் தேர்ச்சியும் இவ்வஞ்சல்களால் புலப்படும். தக்கார்க்கு உதவும் உதவி எப்படியெல்லாம் நாட்டுப் பயனாம் என்பதனை நாட்டும் செய்தி ஆதலின் காட்டப் பெற்றதாம்! அடிகளார் அரவணைப்புத்தானே அழகரடிகளார் தொண்டுகள் அனைத்துக்கும் மூலவைப்பு? இவ்வாறு அடிகளார் தவமனை, தமிழ்க் கலைக்கழகமெனவும், சிவநெறி மன்றமெனவும் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பலவற்றுக்கு ஈதொரு சான்று எனக்கொள்க.