உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

22

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

ஏழைக்கு எக் கட்டணமும் இல்லாமல் விட்டிலே வைத்து ஊணும் உதவி எவர் கற்பிப்பார்? அடிகள் என்ன கொழுத்த செல்வரா? ஆலையோ வாணிகமோஈட்டித் தரும் பணத்தை எண்ணிப்பார்க்கவும் இயலா நிலையில் இருக்கும் செல்வச் செழிப்பரா? கைந்நிறையத் திங்கள் தியம் வாங்கும் திருவாளரா? எதுவும் இல்லையே!

நூல் விற்குமா? விற்ற தொகை ஏதாவது வருமா?இன்று என்ன செய்யலாம்? குடும்பம் பெரியது ஆயிற்றே! என்று நாளும் பொழுதும் தட்டுத்தடவும் குடும்பச் சூழலில் இப்படி உரை கோளாளனுக்கு (பாடம் விரும்பிக் கேட்பவனுக்கு) உதவ எவர் முன்வருவார்? மற்றைக் கல்விக்கூடங்களையும், தனிக்கல்வி கற்பிப்பாரையும் எண்ணிப் பார்க்கவே தனிப்பெருமாண்பு புலப்படும்.

"இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்" (218)

"வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண்பில் தலைப்பிரிதல் இன்று" (955)

அடிகளின்

என்னும் குறள்மணி வாழ்வு அடிகளார் வாழ்வாகும். அடிகளார் தந்த கலைவளம் என்ன செய்தது? வறியர் எனத் தள்ளாது வள்ளற்கலை வழங்கிய பேறு என்னவெல்லாம் செய்தது? மறைமலையடிகள் கல்விக் கழகம்! ஆயது! தனித்தமிழ்த் தொண்டுக்கும் சைவச் செந்நெறிக்கும் தம்மை முற்றாக ஆக்கிக்கொண்ட ‘அழகரடி'களைத் தந்தது.

கல்விக் கழகம் :

1930 இல் மறைமலையடிகள் கல்விக் கழகம் தொடங்கப் பட்டது. அதனைக் குறித்து எழுதுகின்றார் இளவழகனார் :

ஓம் சிவம்

திரு மறைமலையடிகள் துணை

அடிகள்பால் அடியேன் கல்வி பயின்ற நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டாகவும், அடிகள் நம் தமிழ்நாட்டுக்குச் செய்துள்ள அரும்பெரும் நன்மைகளை அனைவரும் என்றும் நினைவுகூர்தற் பொருட்டாகவும் உலகமெங்கும் வல்ல அறிஞர்கட்குப் பல அரும்பெரும் சிறப்புகள் அடையாள