உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

47

"சைதையில் உணவகத்தில் உண்கிறேன்; பயிற்சிக்குச் சிறு ஊதியம் உண்டு; தந்தையார் ; ஊர்க்கணக்கர்; அவரால் என்னை இங்கே சேர்க்க மட்டும் முடிந்தது; அடிகளைக் காணும் நற்பேறும் அவரால் கிடைத்ததென்றுதான் சொல்லவேண்டும்; தாயார் மாணிக்கம்மமாள், இருவரும் சிவநேயர்கள்;

திருக்கழுக்குன்றத்து இறைவரையே வழுத்துவார்கள்; எந்நேரமும் என் தந்தையார் வேதகிரிநாதா

வேதகிரிநாதா என்றே சொல்லிக் கொண்டிருப்பார். எனக்குத் தமக்கை ஒருவரும் தம்பி ஒருவரும் தங்கை ஒருவரும் உண்டு. மரக்கறியே உண்டு பழக்கம்.'

"பயிற்சிப் பாடங்களில் தேர்ச்சி பெறவேண்டாமா? இங்கும் வந்துகொண்டிருந்தால் எப்படி?"

அவை எளிமையாய் இருக்கின்றன; வகுப்பிற் கேட்பதே போதும்"

CC

ஒரு திங்கட்கிழமை மாலையில் வா; நன்னூல் தொடங்கலாம்"

"இதற்குள் உள்ளே இருந்து அம்மையார் வந்தார்கள். "யார் சாமி?"

"பாடம் கேட்க வேண்டுமாம்; சைதையில் இருப்பதால் கிழமைதோறும் வரமுடியுமாம்; சைவப்பிள்ளை; அடக்கமாய் இருக்கிறது; அறிவும் இருக்கிறது; எளிய குடும்பம், உரைகோளாளன் என்று நன்னூலில் சொல்லுவார்கள், அந்த வகையில் அமையலாம்; நம் திருக்கழுக்குன்றத்துப் பெருமானே தெய்வமாம் அம்மையார்:

"நண்ணாப் படிப்பியா? நிலையா இருப்பியா?"

ஒன்றும் சொல்ல நாவெழாமல் ஊமைபோல் அடிகளைப் பார்த்தார். அம்மையார் பால் கொணர்ந்து தந்தார்; 'அருளமுது' எனப் பருகினார்!

இக் காட்சி பாலசுந்தரம் ஆகிய இளவழகனார் அடிகளை முதற்கண் இல்லத்தில் கண்ட காட்சி!

அடிகள் வேலை என, வருவாய் என இருந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியன்று. அத்தகு காலத்தினும் ஆர்வமிக்க

4