உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இளங்குமரனார் தமிழ் வளம் 228

மர நிழலில் வீற்றிருந்த குருதேவரை மாணிக்கவாசகப் பெருமான் கண்டுகொண்ட முதல் நிலையில் அவர் இப்படித்தான் உள்ளம் நிலை கொள்ளாமல் கொள்ளாமல் தத்தளித் திருப்பாரோ எனத் தத்தளித்தார்.

'யார்?' என்று ஒரு கீச்சொலி அடிகளிடமிருந்து எழுந்தது. கையுறையாகக் கொண்டு சென்ற இரண்டு நாரத்தைப் பழங்களையும் வைத்து வணங்கினார் சென்றவர்.

"எங்கிருந்து வருகிறாய்?" "சைதாப்பேட்டையில் இருந்து என்ன செய்தி'

"இராயப்பேட்டைப் பேரவையில் பார்த்தேன்; ஓங்கார விளக்கம் கேட்டேன். இரண்டாம் நாளும் சைவ மாட்சி கேட்டேன். தமிழும் சைவமும் பயில விருப்பம் பெருகிவிட்டது

"பெயர் என்ன?”

99

"பாலசுந்தரம்; சைதையில் ஆசிரியர் பயிற்சியில் இருக்கிறேன். கிழமையில் இருமுறை வரக்கூடும்."

64

சென்னையில்

'இது வரையில் என்னென்ன படித்திருக்கிறாய்?" "மதுராந்தகத்தில் பள்ளித் தமிழாசிரியர் குமரகுரு செட்டியார்; அவரிடம் பதினெண்கீழ்க் கணக்குகள் ஒவ்வோரரளவு படித்ததுண்டு; வீட்டில் நானே பெரும் பாலும் படித்துக்கொண்டேன்; மயிலைசிவ. முத்துக்குமாரசாமி முதலியாரிடம் இரண்டு மாதங்கள் திருமுருகாற்றுப் படையில் ஒரு பகுதி படித்து வந்தேன்; அடிகளைப் பார்த்தது முதல் வேறு நினைவு ஓடவில்லை. அடிகள் நூல்களையே பார்த்து வருகிறேன்.”

"இலக்கணப் பயிற்சி?

"தனியாக எதுவும் பாடம் கேட்டதில்லை" "ஆங்கிலம்?"

"சில தொடர்கள் தெரியும்"

"உணவு எப்படி?"