உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

45

பகுதியை எடுத்துத் தூசி தட்டிப் பிரித்துப் பார்த்து வைப்பது வழக்கம். தம் கைப்படவே கடிதங்கள் எழுதுவார். விளக்குகளைத் தாமே துடைத்து வைப்பார். கடிகாரத்திற்குச் சாவி கொடுப்பார். நாட்காட்டியில் நாள்களை மாற்றுவார். வீட்டில் தூசு தும்புகள் தோட்டத்தில் உதிர்ந்த சருகுகள் யாவும் அப்போதைக்கு அப்போதே நீக்கப்பெறல் வேண்டும். வீட்டில் உள்ள பொருள்கள் தத்தமக்குரிய இடங்களிலேயே இருத்தல் வேண்டும்" இவை புலவர் அரசு அவர்கள் அடிகளாரைப் படம் பிடித்துக் காட்டும் செய்திகள்.

இவற்றை மேலோட்டமாகப் பார்த்த அளவிலேயே அடிகள் திட்டமிட்டுத் தேர்ந்து செயலாற்ற வல்ல திருவாளர் என்பது விளங்கும்.

"பிற்பகல் 4 மணி இருக்கும்; பல்லாவரத்தில் அடிகளார் மாளிகைத் தோட்டத்தில் மெல்ல நுழைந்தேன்'

நல்ல காலம் போலும்! அடிகளார் தமது மாளிகையின் முன் தாழ்வாரத்தில் கட்டைச்சுவர்மேல் எதிர்முகமாகத் தனியாய் அமர்ந்திருந்தார். ஏதோ ஓய்வாகப் படித்துக் கொண்டிருந்தார். அத்தகைய அமர்த்தலான நிலையை இறுதிவரையில் அவர்கள் வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை; அடியேற்கு என்றே ஒருநாள் மட்டும் அவ்வாறு அமர்ந்திருத்தார்கள் போலும்!"

என்று அழகரடிகள் எழுதும் எழுத்தால் அடிகளாரின் ஒழுங்கு மாறா ஒரு சீர் நிலையை அறிந்து கொள்ளலாம். அடிகளார் செயல்நிலை இன்னதெனத் தெரிந்தால், 'இன்ன நேரம் இது' எனத் திட்டமாகக் கூறலாம் என்பர். அத்தகு கடைப்பிடியர் அடிகள். இக் கடைப்பிடி ஒழுங்கும் தூய்மை போற்றலும் இயற்கை நாட்டமும் சுவைத் தேர்ச்சியும் உள்ளுள் ஊறிக் கிடந்து கிடந்து என்ன செய்தன! தமிழின் தனித் தன்மையை தமிழின் தூய்மையை தமிழின் நடையழகை - தமிழின் இயற்கை எழிலை - உலகம் கண்டுகொள்ளும் வகையில் தனித் தமிழ் இயக்கம் தோன்றப் பக்குவப்படுத்தின - பண்பட்ட இயல்வளம் ஆக்கின என்பதேயாம்.

-

ஒரு மாணவர்:

பல்லவ புரத்துப் பொதுநிலைக் கழகத் திருமாளிகையில் மாணவப் பேறு எய்த ஒருவர் செல்கின்றார். அடிகளாரின் அமர்ந்த கோலம் கண்ட அவர், திருப்பெருந்துறையில் குருந்த