உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இளங்குமரனார் தமிழ் வளம் - 22 22

அடிகளின் இருக்கையும் மேசையும் எழுதுகோலும் நூல்களும் தூயவைகளாக இருக்கு. எழுதுகோலும் நூல்களும் தமக்குரிய இடத்தைவிட்டு மாறியிருந்தது எப்போதும் இல்லை. மாளிகையின் கீழும் மேலும் தனித்தனியே மேசை நாற்காலி முதலிய படிக்கும் வசதிகள் உண்டு. ஓய்வாய் இருக்கும்போது சாய்ந்து படிக்கச் சாய்வு நாற்காலி பஞ்சணையுடன் உண்டு.

2

பகலுணவு 21/, மணிக்குமேல் 3 மணிக்குள்ளாக நடைபெறும். இந்துப்பையே கறி முதலியவற்றில் சேர்த்துக் கொள்வார் மிளகாயும் புளியும் சேர்க்க மாட்டார். ஆங்கிலக் காய்கறியும் பட்டாணியும் கோசுக்கீரையும் பொன்னாங் கண்ணிக் கீரையும் மிளகு நீருமே அடிகட்கு விருப்பம். எலுமிச்சம் பழமே புளிக்கு மாறாகச் சேர்க்கப்படும். எலுமிச்சம்பழத் தொக்கு அடிகளுக்கு மிகவும் விருப்பமானது. உண்ண அரைமணி நேரம் ஆகும். உணவுக்குப்பின் சிறிது உறங்குவார். பிறகு நூல்களுக்கு உறையிடுதலும், ஆங்கில நூல்களின் ஓரம் பிரித்தலும் செய்வார். 6 மணிக்கு இஞ்சிநீர் பாலுடன் கலந்து பருகுவார். மறுபடியும் மறுபடியும் உலாவுவார். இறைவழிபாடு செய்வார். 8 மணி முதல் 10 மணிவரை எழுதுதலும் நூலாய்தலும் ஒழுங்காகச் செய்வார். பதினோரு மணிக்கு ‘எனிமா' வைத்துக்கொள்வார். வேது பிடிப்பார்.

இரவு ஒரு மணிக்கே சிற்றுண்டியும் பாலும் உண்பார். 2 மணிக்கே படுக்கைக்குச் செல்வார்.

காலையில்

துயிலில் இருந்து

எழுந்தவுடன் கண்ணாடியிலே தம் உருவத்தை நோக்கிக் கல்வி செல்வம் நலம் என்னும் மொழியைப் பன்முறை கூறுவார்.

ஆடையைக் காலை மாலை இருபோதும் மாற்றுவார் எண்ணெய் கலந்த சிற்றுண்டிகளைத் தொடமாட்டார். நெய்யே யாவற்றிற்கும் பயன்படல்வேண்டும் தாளிப்பதும் நெய்யிலேதான். கடுகு சேர்க்கமாட்டார். காப்பி, தேயிலை முதலிய குடிவகைகள் அவருக்கு வெறுப்பானவை. பசும்பாலும் நெய்யுமே அவருடைய செலவில் மிகுதியான பொருளைக் கவரும். இவ்வாறு தம் உடலைப் பேணும் வகையில் மிகவும் விழிப்பாகவே இருப்பார். தாம் சொற்பொழிவு செய்யப்போகும் இடங்களிலும் இவ் வகை உணவே வேண்டுமென முன்னரே எழுதிவிடுவார்.

அடிகளுக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உண்டு. ஒவ்வொரு நாளும் தம் நூல்நிலையத்தில் உள்ள நூல்களில் ஒரு