உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் மேலாய்வு :

தமிழ் மலை

43

விளையாட்டுப் பருவக் குழந்தையின் செய்கைபோல் கருதத் தக்கது அன்று இது! வேடிக்கைச் செய்தியும் அறிவறியாத் தன்மையும் அன்று! அன்று! அடிகளார் ஆழ்ந்த மூளைக்கூர்ப்புக்கும், கடும் உழைப்புக்கும் ஓய்வு பெறும் 'மாசில் வீணை' மாலைமதி, வீசுதென்றல், வீங்கிள வேனில், மூசுவண்டறைபொய்கை இவையே! இன்னும் சொன்னால் கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் குளிர்தரு, தருநிழல், நிழல் கனிந்த கனி, ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீர், மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்று இன்னவெல்லாம் தம்மை மறந்து, தாமே குழந்தையாய் மாறி நிற்கும் அடிகளார் செய்கையேயாம்! சிலர் ஆடலில் சிலர் பாடலில் சிலர் காட்சியில் சிலர் உலாவலில் - சிலர் பிறபிற வழிகளில் மன அமைதி பெறுவர்; வாழ்வின் வெம்மையை மாற்றிக் கொள்வர். அடிகளாரோ இவ்வினிய வகையை மேற்கொண்டார்! இம் மேற்கோள் அவர்தம் பணிச்சீர்மைக்கு ஏந்தாக அமைந்ததென்க. அடிகளார் நாள்வழிக் கடமைகள் எப்படி?

-

நாள்வழிக் கடமை :

ம்

“காலையில் எட்டு மணிக்குத் துயிலில் இருந்து எழுவார்.” இதனைப் படித்ததும் அடிகளாரா அப்படி! வைகறைப் போதில் எழாரா? விடிந்தும் இரண்டு மணிப் பொழுதும் நடந்த பின்னரா எழுவார்? என வினவத் தோன்றும்! நாள்வழிக்கடமைகளை முழுதுறக் கண்டு பின் எண்ணங்களை ஆய்வில் ஓடவிடுக :

எட்டு மணிக்கு எழுந்த அடிகள் பாதக் குறடு இட்டவாறே சிறிது பொழுது, பொதுநிலைக் கழக மாளிகையைச் சுற்றியுள்ள பூங்காவில் உலாவுவார். பிறகு 'எனிமா' வைத்துக்கொண்டு குடல் தூய்மை செய்வார்.

11 மணிவரை காலைக் கடனும் நீராடுவதும் இறைவழிபாடும் நடைபெறும். பிறகு கஞ்சியுணவு கொள்வர். அவ்வுணவையும் ஆர அமர இருந்தும் சிறிது சிறிதாகப் பருகுவார். அதனுடன் பக்குவப்படுத்தப்பட்ட திராட்சை முதலிய பழவகைகளையும் சுவைத்துண்பார். இட்டலியும் சில நாளில் உணவாகும். காலைச் சிற்றுண்டி முடிந்ததும் அரைமணி நேரம் மறுபடியும் உலவுவார். பிறகு இருக்கையில் இருந்து நூலாய்வார், கடிதம் எழுதுவார்; நூல் எழுதுவார்.