உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

பேரறிஞர் கா.சு.; பொறியியல் அறிஞர் பா. வே. மாணிக்கர்; தமிழ்த்தென்றல் திரு. வி.க. ; மணிதிருநாவுக்கரசர் : கா. நமச்சிவாயர்; ச. சச்சிதானந்தர்; பாரிப்பாக்கம் கண்ணப்பர்; இசைவல்லார் சாம்பமூர்த்தியார்; நெல்லை சுந்தர ஓதுவார்; பரலி சு. நெல்லையப்பர்; செந்தில் ஆறுமுகனார்; பெரும்புலவர்

மு. சுப்பிரமணியனார் இன்ன பெருமக்கள் முன்னிலையில் விழா பெருஞ்சிறப்பு உற்றது. இசையரங்கு, இசைக்காதை, வாழ்த்து, அழைப்பு இன்னவெல்லாம் சீர்சிறக்கச் செறிந்தன. அரங்கர் அம்பிகை வாழ்க்கை பாளையங்கோட்டையில் தொடங்கியது.

நீலாவுக்கு அஞ்சல் :

அடிகளார் உள்ளம்

வன்கண்மையதா?

மென்

பிறவும்

கண்மையதா? சூழலும் செயலும் காலமும் எவரெவரையெல்லாம் எப்படி எப்படி ஆட்டிப் படைத்து விடுகின்றன! ஒன்றாய் உருகி நின்ற உள்ளமும், வேறாய் இருவேறு துருவங்களாய்ப் பிரியும் இயல் ஏற்பட்டுவிடுகின்றதே! தா ஓர் அஞ்சல்; அடிகளார் தம் அருமை மகளார்க்கு வரைந்தது; அடிகளார் உள்ளத்தை உள்ளபடி காட்டுவது:

ஓம் சிவம் டி.எம். அச்சுக்கூடம், பல்லாவரம்.7-12-1927

அருமை திருமிகு திருவரங்க நீலாம்பாளுக்கு அம்மையார் திருவருளால் எல்லா நலங்களும் உண்டாகுக!

நீங்கள் இருவரும் அறிவும், உங்கு நலமுடன் சேர்ந்த அன்றைக்கே எழுதிய கடிதங்கள் இரண்டு பெற்றுப் பேரின்ப வெள்ளத்துள் திளைத்தேம் ஆயினேம். நீலாவும் அவள்தன் அருமை அத்தையாரும் அன்னையும் புதல்வியும் போல் அளவளாவுதலை அறிந்தெழுந்த பெருமகிழ்ச்சியால் எம்பெருமானை வாழ்த்தியும் வணங்கியும் எம் புல்லிய நன்றியைச் செலுத்தினேம்.

அத்துணையன்புடன்

யாம் கற்ற பண்டைத் தனிச் செந்தமிழ் அகப்பொருள் இலக்கணத்திற்குக் கண்கண்ட இலக்கியமாய் நீவிர் இருவீரும் ருதலைப் புள்ளின் ஓர் உயிரினராய்த், 'தோகைக்கும் தோன்றற்கும் ஒன்றாய் வரும் இன்ப துன்பங்களே' என்று திருச்சிற்றம்பலக் கோவையாரில் மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்தாங்கு, இன்ப துன்பங்களிலும் ஒருவரை