உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

61

முறையே இவற்றின் திறப்பு விழாவும், குடமுழுக்கு விழாவும் பொதுநிலைக் கழக இருபதாம் ஆண்டு விழாவும் ஒருங்கே நடத்தத் திட்டப்படுத்தினார். அந்நாள் 1931 ஆம் ஆண்டு பெப்ரவரித் திங்கள் இரண்டாம் பக்கல் தைப்பூசத் திருநாள் ஆகும்.

அடிகள் நடாத்திய குடமுழுக்கு அவர்களாலேயே தமிழ்மறை ஓதிச் செய்யப்பட்டது ஆகும். விழாவுக்கு வந்திருந்தவர் அனைவரும் தாமே அம்பலவாணர் திருவடியில் மலரிட்டு வணங்கினர்; தாமே திருநீறு எடுத்து அணிந்து கொண்டனர். அம்பலவாணர் திருமுன் எவ்வகையான ஏற்றத்தாழ்வுமின்றி வழிபாடாற்ற அடிகள் செய்த ஏற்பாடு வள்ளலார் வழிபட்டதாகும்!

மணிமொழி

வழிபாட்டு நிகழ்ச்சி முடிந்தபின் நூல்நிலையம் திறக்கப்பெற்றது. அதன்பின் பொதுநிலைக்கழக விழாத் தொடங்கியது. தேவார திருவாசகங்கள் இன்னிசைக் கருவிகளுடன் ஓதப்பட்டன. அன்பர்கள் மகிழ்ச்சியின் இடையே அடிகள் அவைத் தலைமை பூண்டார்கள். அப்போது திருவாவடுதுறைத் திருமடத்துத் தலைவர் அடிகட்கு அனுப்பிய பொற்பட்டாடையும் பொற்பட்டுப் போர்வையும் மறைத்திரு. கருணானந்த அடிகள் சிறப்பித்துக் கொடுக்க, அடிகள் அவற்றை ஏற்றருளினார். சென்னைப் பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் மணி. திருநாவுக்கரசர் பொதுநிலைக்கழக அமைப்பும் நோக்கமும் பற்றி விளக்கியுரைத்தார்.

ளவழகனார் விரிவுரையாளர்களுக்கு வரவேற்பும், பொருளுதவி செய்தார்க்கு நன்றியும் கூறினார்; அடிகள் அப் பேரவையில் "அம்பலவாணர் திருக்கூத்தின் உண்மையும் ஞானயோகமும்" என்பது பற்றி உரையாற்றினார். பின்னர் இரண்டு நாள்கள் அறிஞர்கள் பலர் உரையாற்றினர். ஆக முப்பெரு விழாக்களும் மூன்று நாள் விழாக்களாகச் சிறந்தன. இவ்விழாப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடிகளாரின் சீர்திருத்த செவ்விதின்

விளக்குவனவாம். அவை :

1)

2)

நாட்டத்தைச்

மடத்துத் தலைவர்கள் எல்லாக் குலத்தவர்க்கும் வேற்றுமை இன்றிச் சமயச் சடங்குகள் கற்பிக்க முயற்சி செய்தல் வேண்டும்.

கோயில்களில் வேற்றுமையின்றித் திருநீறு முதலியன பெறவும் நிற்கவும் கோயில் தலைவர்கள் இடம் செய்தல் வேண்டும்;