உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

"துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

மற்றை யவர்கள் தவம்”

63

என்னும் மறைமொழியைச் சொல்லுமாறே உள்ளது இவ்வாறு அமைந்ததே அடிகளார் தனித்தமிழ் இயக்கம் கண்டதும், இந்தி எதிர்ப்பில் தலைப்பட்டு நின்றதுமாம்!

ஒரு சொற்போர் :

தனித்தமிழ் இயக்கம் தோன்றிய சூழலை அறிந்துள்ளோம். அதனைப் பழுத்த புலமையாளர்களும் போற்றத் துணிய வில்லை. 'தனித்து அமிழ்' என்று அத்தொடரைப் பிரித்து எள்ளியவர்களும் உண்டு. ஒரு புதுமை தோன்றும்போது, அதனை ஆய்ந்து அறிவாளர்கள் ஏற்றுப் போற்றத் தொடங்கினால், அது நாடு தழுவிய விளக்கமாய்த் திகழும். அவ் வகையில் அடிகளாரின் அருமை மகளார் நீலாம்பிகையார் தனிப்பெரும் பரப்பாளியாகத் திகழ்ந்தார். அவர்தம் அருமைத் துணைவர் திருவரங்கனார் அத் தூய தமிழ்க்காதல் தொண்டாலேயே தம்மை இழந்து பின்னே நீலாம்பிகையார் காதலில் கட்டுண்டு கடிமணம் கொண்டவர் அல்லரோ! அதனால், அவர் அடிகளார் இயக்கத்திற்கு ஊன்றுகோலாய் அமைந்தார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு களாலும், 'செந்தமிழ்ச் செல்வி' என்னும் இதழ் வழியாலும் பெருந்தொண்டு செய்தார். அவர் ஊன்று கோலாய் இருந்தார் என்னின், அவ்வியக்கத் தூணாக இருந்தவர் அவர்தம் தம்பியார் தாமரைச் செல்வர் வ.சுப்பையா அவர்களே ஆவர். எத்தனை எத்தனை அறிக்கைகள்! துண்டு வெளியீடுகள்! ஆசிரிய உரைகள்! இவற்றின்மேல் பாவாணர் எழுத்து அடிகளார் இயக்கத்திற்கு மாளிகை எழுப்பி மணிக்கூண்டும் அமைத்தது போன்ற மாண்பினதாயிற்று. அடிகளார் காலத்தில் தனித்தமிழ்க்கு இருந்த நிலையை ஓர் எடுத்துக்காட்டால்

காணலாம்.

24-7-1927 இல் கரந்தை தமிழ்ச் சங்க ஆண்டுவிழா. அவ் விழாவில் அடிகளார் தலைமையுரையாற்றினார். அடிகள் தம் உரையின் இடையே ஆ என்பது சிலருக்கு விளங்காது பசு என்றால் விளங்கும் ஆ என்பது தனித்தமிழ்ச் சொல். பசு என்பது வடசொல். தண்ணீர் என்று உரையாது நம் மக்களிற் பலர் ஜலம் என்கின்றனர் ஜலம் என்பது வடமொழி ஐயகோ! மலையாளிகள்கூட வெள்ளம் எனும் தனித்தமிழை வழங்கு கின்றனரே என்றார்.