உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

228

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

அவ் விழாவில் அடிகளுக்கு முன்னர்ப் பெரும் புலவர்கள் நாவலர் ந. மு. வேங்கடசாமியார்,

கதிரேசனார்,

உமாமகேசுவரர்

கரந்தைக்

பண்டிதமணி

கவியரசு,

புரவலர்

ஆகியோர் இருந்தனர். அவர்களுள் பண்டிதமணியார், "சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்" என்று அப்பர்கூட கூறியிருக்கிறாரே என்றார். உடனே அடிகளார், சலசல; என்ற ஓசையுடன் ஓடுதலின் சலம் என்பது

காரணப்பெயர். அது தமிழ்ச் செய்யுள் ஒன்றிலும் கூறப்பட்டுள்ளதே! அது வடமொழிதான் என்று உறுதியானால் அதைவிட்டு நீர்' என்னும் தனித்தமிழ்ச் சொல்லை ஆளலாமே. ஆ! ஆ! என் செய்வது! தனித்தமிழை இழிவென்று நினைப்பது முறையாகுமோ? தமிழிலே கடவுளை வணங்கக்கூடாது என்று கூறும் பார்ப்பனரும் உளர். பெரியோர் தமிழைப் பகுத்துப் பாழ் செய்தால் அது குற்றமில்லையோ? இப்படிப் புலவர் பலர் தனித்தமிழ் உணர்ச்சி தகுதியற்றதென்று மொழிந்து தமிழைப் பாழாக்கினால் ஐயகோ! என் செய்வது"

"பழம் புலவர்களால் தமிழ் பாழாகவா போய்விட்டது?

"இடைக் காலத்துப் புலவர் பழைய தனித்தமிழ் உணர்வை மறந்து வடசொற்களை மிகுதியும் புகுத்தித் தமிழைக் கெடுத்துத்தான்விட்டனர். அவர்களை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்? வடசொற்களைக் கலத்தல் குற்றமில்லையாயின் ஆங்கிலத்தையும் தாராளமாக வழங்கித் தனித் தமிழ் உணர்ச்சியைக் கெடுத்தால் நற்றமிழ் எவ்வாறு உயிர் வாழும்? அந்தோ! குமரகுருபரர் 'சலாம்' என்னும் சொல்லை வழங்கினார் என்று நாமும் பல கொடுந் துலுக்கச் சொற்களை வழங்கித் தமிழைப் பாழ்படுத்தலாமா? (கைதட்டல்) யானை வழுக்கி விழுந்தால் அஃது அதற்குப் பெருமையாக முடியலாம். நாங்களோ சிறியோம். எங்களுக்கு இடர் மிகுதியும் உண்டு".

அதன் பின்னர்ப் பண்டிதமணியார் தொல்காப்பியத்தில் வடசொற் கலப்புப் பற்றிய செய்தி உள்ளது என்றும், திருவள்ளுவர் வேதவழக்கொடுபட்டு நூல் செய்தார் என்றும், அவர் கருத்தறிந்து பரிமேலழகர் உரை வரைந்தார் என்றும் விரியக் கூறினார்.

உணர்வோங்கிய அடிகளார், "இப்பொழுது தமிழுக்கு பரிந்து பேசுவோர் பலர் இலர். தமிழராய்ப் பிறந்த பாவிகளே தமிழைப் பாழ்படுத்திவிட்டார்கள்; பாழ்படுத்துகிறார்கள்” என்றார். அப்பொழுது பண்டிதமணியார், "பழம்புலவர்களால்