உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

65

தமிழ் பாழாகவா போய்விட்டது?" என்று மீண்டும்

வினாவினார். அடிகளார், அவர்களிலும் சிலர் பாழ் செய்தற்கு இடங்காட்டி விட்டார்கள்" என்றார். கதிரேசனார், "தொல்காப்பியர்" என்றார். அடிகளார் 'அம் முறையில் அவரும் ஓர் இழையளவு வழுவியே விட்டார். அஃது ஒண்டவந்த பிடாரிக்கு ஊர்ப்பிடாரி இடங்கொடுத்த கதையாகவே முடிந்தது, என்று மறுமொழியுரைத்து அவையோரை நோக்கி" அன்பர்களே நாம் தமிழை உயிரோடு வைக்கப் பாடுபடவேண்டும். ஐயகோ! தமிழைக் கொல்ல மடிகட்டி நிற்கலாமா? நூற்றுக்கு எண்பது வடசொல்லும் இருபது தமிழ்ச் சொல்லுமாக எழுதினால் பேசினால், தமிழ் எப்படிப் பிழைத்தல் கூடும்? வடமொழி பயிலவேண்டாம் என்று யான் கூறவில்லை. மகிழ்வுடன் பயிலுங்கள்; யானும் பயில்கின்றேன். ஆனால் அன்பர்களே தமிழ்த் தாயைக்கொல்லாதீர்கள். தமிழ் நன்மங்கையின் அழகிய நன்மேனியில் அம்மைத் தழும்புபோல் வடசொற்களைப் புகுத்தாதீர்கள். அடியேன் உங்களைப் பெரிதும் கெஞ்சுகிறேன். ஆண்டவர்களே தமிழைக் கெடுக்காதீர்கள். தனித்தமிழுக்குப் பாடுபடுங்கள் என்றார். அவை பெரிதும் கைதட்டி வரவேற்றது.

பண்டைப் புலவராயினும், இக்காலத்தவராயினும் மற்று எவராயினும் தமிழுக்குக் கேடு விளைத்தோரை, விளைப்போரை ஒரு பொருளாகக் கருதமாட்டேன். பழம் பெரும் புலவர் ஒருவர் ஒரு வடசொல் வழங்கியிருந்தால் பிற்காலத்தில் நூறு சொற்களை வழங்குகிறார். நாம் நூறாயிரம் சொற்களை வழங்குகின்றோம். பெரும் கடனாளியாகின்றோம்.

நான்

சங்கத் தமிழ் வழக்கை இடைக்காலத்தவர் பின்பற்றி யிருந்தால் அவர்களுக்குப் புகழ் உண்டு. இடையில் வந்து தமிழைக் கெடுத்தவர்களை ஒருநாளும் பொருட்படுத்தேன். தமிழிற் பிறமொழிக் கலப்பை வெறுத்துத் தள்ளுங்கள். தமிழின் சுவையை மாற்றாதீர்கள் வல்லோசை களைப் பெருக்காதீர்கள். தமிழர் ஆரியத்திற்கு அடிமைபட்டு அச் சொற்களைத் தமிழிற் கலத்தல் தீங்கே. இவ்வடி மைத்தனத்தில் நின்றும் முதலில் விடுபடுங்கள். இது முதலிற் பெறவேண்டிய விடுதலை (சுயராச்சியம்) (நீண்ட நேரம் கைதட்டி அவை வரவேற்றது). மேலும் அடிகள் உணர்ச்சி மீக்கூரப் பேசினார். கதிரேசனார், யான் தனித் தமிழ் உணர்ச்சியைப் பற்றிக் குறைகூறவில்லை" என்றார். எங்களைப்