உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இளங்குமரனார் தமிழ் வளம் 22

போன்ற பெருந்தமிழ்ப் புலவர்களின் உதவியில்லாமல் தனித்தமிழ் வளரமுடியுமா? தாங்கள் பெரும் புலவர். தாங்கள் அப்படிப் பேசியதனால்தான் எனக்குப் பெருவருத்தம் உண்டானது. மற்றவர்கள் தனித்தமிழுக்கு மாறாகச் சொன்னால் எனக்கு இவ்வளவு கவலை ஏற்பட்டிராது" என்றார் அடிகள். பின்னர்ப் பண்டிதமணி, அடிகள் நேற்று பேசியதிலிருந்து தனித்தமிழைப் பற்றி எனக்கு இருந்த அரைகுறையான ஐயங்கள் அடியோடு அகன்று விட்டன. நம் பெரியோர்கள் வடசொற்களைத் தமிழிற் கலந்துவிட்டார்களே. நாம் அவற்றை நீக்கின் அவர்கள்

செயல்குற்றமென்று கூறப்படுமோ' என்று தான் யான்

அஞ்சியிருந்தேன், தனித்தமிழை எதிர்த்தேன். ஆனால் அதற்கு அடிகள் சரியான விட்டீர்கள் விடையளித்து என்று

பாராட்டடித் தம் கருத்தொப்புதலை வெளிப்படுத்தினார்.

-

மறைமலையடிகள் வரலாறு 522-535. (செந்தமிழ்ச் செல்வி 1937 ஆக, செப்,)

பெரிதும் பிறசொற் கலவாமல் எழுதியவர் எழுதத் தேர்ந்தவர் ப்ண்டிதமணியார்! எனினும் ஒரு புதிய கொள்கையை அது எவ்வளவு நல்லதாக இருப்பினும் ஏற்பதற்குள்ள இடர்ப்பாடு எத்தகையது என்பதை விளக்கும் செய்தி இது. ஆனால் விடாப்பிடியாகப். "பல்கலைக் கழகம்" என்பது வழக்குக்கு வந்தும் சர்வகலா சாலையை விடேன் என்றும், நூல் என்பது பழவழக்கும் பெருவழக்குமாய் இருந்தும் ‘சாஸ்திரம்’ என்பதை விடேன் என்றும் முரட்டுப் பிடியாக இருந்த அறிஞர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் பண்டிதமணியின் பெருமையும் சால்பும் இனிது விளங்கும்! அதே வேளையில் அடிகளார் கொள்கையூற்றமும் செவ்விதில் புலனாம்.

இந்தி எதிர்ப்பு :

இராசாசி அவர்கள் 14-7-1937 இல் சென்னை அரசின் முதல்வரானார். அவர்ஆட்சிக்கு வந்த சில நாள்களில் 5,6,7 ஆம் வகுப்புகளில் இந்தியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும். என்னும் சட்டத்தைக் கொண்டுவந்தார். அதனை எதிர்த்துத் தமிழ் அறிஞர்களும் தமிழ்சார் கட்சித் தலைவர்களும் போர்க்களத்தில் இறங்கினர்.

"அந்தோ! வடமொழி வந்து தமிழைப்பெரிதும் வீழச் செய்துவிட்டதே! அதைக் குற்றுயிராக்கி விட்டதே ஆங்கிலம்! இனி இந்தியும் வந்தால் தமிழ் ஒழிதல் திண்ணமே" என ஏங்கிய