உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

22

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

பாளையங்கோட்டைக்கு வந்து படுத்தார்! மீள எழுந்திருக்க வில்லை! 28-4-44 இல் உலகை விட்டுப் பிரிந்தார்!

நீலாம்பிகையார் நிலைமை என்ன? தம் காதல் தலைவ ருக்காக ஒன்பான் ஆண்டுகள் காதல் தவம் கொண்டவர் அல்லரோ அவர்! எப்பாடு பட்டிருப்பார்! அவர்தம் உடல் நிலைதான் என்ன! மெலிந்தது! நலிந்தது! அவரால் ஓராண்டும் தாங்க இயலவில்லை! 5-11-45 இல் இயற்கையொடும் ஒடுங்கினார்! இவ்வொடுக்கங்கள் அம்மையையும், அப்பர் ஆகிய அடிகளையும் விட்டு வைக்குமோ?

அடிகள் தம்மக்களுள் நீலாம்பிகையார்மேல் கொண்ட பேரன்பு இணையற்றது; உடன் பிறந்தாரும் பொறாமை கொள்ளும் அளவு மிக்கது! தம் தமிழ் வாழ்வே அம்மகவு' தம் தமிழ்த் தொண்டின் வழியே அவர்' அடிகளார்க்கு அமைதியுண்டாகுமோ?

எனக்கண்ட எனக்கண்ட

-

நீலாம்பிகையாரின் அன்னை சவுந்திரம் அம்மையார் நோயர் ஆனார்! படுக்கையர் ஆனார்! மூன்றாண்டுகள் அளவு நோயொடு போராடிக்கிடந்த கிடையாய் அமைந்து வாராப் பெருநடையும் கொண்டார். அந்நாள் 24-5-50!

பேரன்புப் பெருந்துணை ஒப்பற்ற துணை என நின்ற அம்மையார் பிரிவு அடிகளைப் புண்மீதில் அம்பு பாய்ச்சிய காடுமைக்கு ஆளாக்கிற்று! மோதும் வெள்ளத் திடையே பட்ட உப்பு மலை எத்துணைக் காலம் தாங்கும்! அம்மையார் மறைவின்பின் அடிகள் மூன்று திங்கள் அளவே மண்ணில் உலாவினார்!

இறுதியாவணம் :

15-8-1950 இல் அடிகள் நோயெனப் படுத்தார். ஒரு கிழமை கஞ்சியும் பழச்சாறும் பருகினார். மருத்துவப் பேரறிஞர் குருசாமியார் வந்து பார்த்தார். அடிகளுக்கு "ஈரற்பை வீங்கியுள்ளது; இனிப் பிழைப்பது அருமை என்றார். அடிகளின் இல்லமருத்துவர் ஆனந்தர் மருந்து தந்து பேணினார். அடிகள் அம்பலவாணர் திருவுருவை நோக்கிக் கொண்டு கைகுவித்தும் வாழ்த்தியும் அமைதியை நாடியே நின்றார். 9-9-50 இல் தாம் ஈட்டிய செல்வம் பயன்படுத்தப்பட வேண்டிய வகை குறித்து இறுதியாவணம் எழுதினார்.