உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

79

தாம் தொகுத்த 'மணிமொழி நூல்நிலையம்' பொது மக்களுக்குப் பயன்படும் வகையில் மறைமலையடிகள் நூல் நிலையம் என்னும் பெயரால் பயன்படுத்தப்படவேண்டும் என்றும், தம் நூல்களைப் பதிப்பித்து அதனால் வரும் வாரமுறை வருவாய் தம் குடும்பத்தைச் சாரவேண்டும் என்றும் இப் சைவசித்ததாந்த நூற்பதிப்புக் கழகம்

பணியைச்

மேற்கொள்ள வேண்டும் என்றும் எழுதிவைத்தார். இதனை நிறைவேற்றற் குழுவினராக மருத்துவர் ஆனந்தர் சைவசித்தாந்தக் கழக ஆட்சியாளர் வ. சுப்பையா ஆகியவர்களை உள்ளிட்ட எழுவரை அமர்த்தினர்.

ஒளியுடல் :

இறுதியாவணம் எழுதி நிறைவேறிய பின்னர் ஐந்து நாள்கள் அடிகள் பருவுடலம் தாங்கியிருந்தார். 15-9-50 மாலை 3.30 மணிக்குத் தமிழும் சைவமும் தத்தளித்துக் கலங்க அடிகள் ஒளியுடன் உற்றார்!

மறு நாட் காலையில் அடிகளின் உடல் மண நீரால் நீராட்டப்பட்டது. மலர் மாலையொடு கண்ணீர் மாலையும் சேர மக்கள் வரிசைவரிசையாய்த் திரண்டனர்! அறிவுச் செல்வர்கள் உற்ற அவலமோ சொல்லில் அடங்காது! அடிகள் உடல் பூம்பல்லக்கில் வைக்கப்பட்டு அன்பர்கள் தோள் மிதவையாக மக்கட் கடலின் ஊடே எடுத்துக் கொண்டு நன்காடு சேர்க்கப்பட்டது. அங்கே பெரும் புலவர்கள் மு.வ; இரா.பி. சேது; தருமாம்பாள்; சானப் சாபி மகமது; பாரிப்பாக்கம் கண்ணப்பர்; ஆடலரசு; ஆகியோர் கையறு நிலை கூறினர். இரவு எட்டுமணியளவில் அடிகளார் பொன்னுடல் செந்தீ நாவுக்கு இரையாயிற்று. 17-5-50 இல் அடிகளார் உடற்பொடி கடலொடு கலந்தது.

"மூவா யிரவாண்டு மோதும் வடமொழியால்

சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக்

குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர்

அமரர் மறைமலை யார்

எனப்பட்ட அடிகளாரின் பேரூழி இவ்வாறமைந்தது.

அடிகளார் மறைவுக்கு இரங்கல் மலையாய்க் குவிந்தது; அன்புள்ளங்கள் ஆறாய் ஒழுக்கின! இதழ்கள் ஓலமிட்டன!