உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

83

இராமலிங்க சுவாமிகளை யொட்டிக் கதிரைவேலருக்கும் வேதாசலனார்க்கும் பலதிற வாதங்கள் நடந்தன. சிவனடியார் திருக்கூட்டங்கள் இரண்டாகப் பிரிந்தன. ஒரு கூட்டம் கதிரைவேற்பிள்ளையை ஆதரித்தது. மற்றொன்று வேதாசலத்தை ஆதரித்தது. பின்னைய கூட்டம் கதிரைவேற் பிள்ளைக்குப் பலவிதத் தீங்கு செய்ய முயன்றது. கதிரைவேலர்மீது கல்லை எறிந்தது; அவரை இழித்து இழித்துத் துண்டுகள் வெளியிட்டது; அவரைப் போன்ற உருவஞ் செய்து அதைப் பாடையில் இட்டுக் கொளுத்தியது. இவைகள் எல்லாம் போக, மற்றொரு கொடுமை நிகழ்த்த உறுதிகொண்டது. அஃது இராமலிங்க சுவாமிகள் கொள்கைக்கு முற்றும் மாறுபட்டது. அஃதென்ன? கொலை!

வழக்குக் காலத்தில் கதிரைவேற்பிள்ளை இரவு பத்து மணிவரை சிந்தாதிரிப் பேட்டையில் இருப்பார். சில சமயம் பன்னிரண்டு மணிவரை இருப்பார். அதற்குமேல் புரசை நோக்குவார். ஒரு நாள் அவரை வழியிலே கொலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாம். அச் செய்தி எப்படியோ வேதாசலனார்க்கு எட்டியது. வேதாசலனார் இரக்கம் உடையவர்; இராமலிங்க அடிகளின் அருள் நெறியில் நிற்பவர். அவர் என் செய்தார்? யாழ்ப்பாணத்து மாணாக்கர் ஒருவர் வாயிலாகக் கொடுமையைக் கதிரைவேற் பிள்ளைக்கு அறிவித்தனர்.அன்று கதிர்வேற் பிள்ளை தக்க காவலுடன் சென்றனர். கொலைஞர் கருத்து நிறைவேறவில்லை. இந் நிகழ்ச்சியை எனக்குச் சொன்னவர் மறைமலையடிகளே.

- திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் - 163-169.

.

"தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலையடிகட்கு உண்டு. அவர் தமிழ்ப் புலமையும் மொழிப் புலமையும் ஆராய்ச்சியும் பேச்சும் எழுத்தும் தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; மரமும்முழங்கும்"

அடிகள் பேச்சு பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து பல எழுத்தாளரை ஈன்றது; நூல் பல நூல் ஆசிரியன்மாரை அளித்தது. அடிகளே தென்னாடு; தென்னாடே அடிகள் என்று கூறல் மிகையாகாது.