உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

மங்கையர்க்கரசியாரின் மணவாளப்பிள்ளையின் பெயர் இராபின்சன் என்பது. அப்பெயரை 'அறவாணன்' என மாற்று தற்குப் பாவாணர் விரும்பினார் என்பது மு. அறவாழியார்க்கு எழுதிய அட்டையால் விளங்குகின்றது. அதில், திருவாட்டி மங்கை இராபின்சன், 21ஹ, உலகநாதபுரம், எண்ணூர், சென்னை - 87. என் மருமகன் பெயரை இனிமேல்தான் அறவாணன் என்று மாற்ற வேண்டும் என்கிறார்.

எத்தனை எத்தனை பேர்களுக்குப் பெயர்மாற்றக் கருத்து வழங்கியவர் பாவணர்! பெயர்மாற்றி உதவியவரும் பாவாணர்! பெயர் மாற்றத் திருநாள் ஊரலறிய விழாவாக நடாத்த வேண்டும் என்று உ.த.க. வினர்க்கு உரைத்தவரும் பாவாணர்! தம்மருகரை மட்டும் பெயர் மாற்றத்திற்கு உட்படுத்த விரும்பாமல் இருப்பாரா?