உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. ஓய்விலா ஓய்வு

பாவாணர் தம் 17 ஆம் அகவை தொட்டே ஆசிரியப் பணியில்புகுந்ததை அறிவோம். 1961 ஆம் ஆண்டு வரை பல்வேறு நிலைகளில் பல்வேறு இடங்களில் பணி செய்தமையையும் அறிந்துள்ளோம். அவரிடம் பயின்ற மாணவர்கள் - பழகிய ஆசிரியர்கள் - பெற்றோர்கள், அன்பர்கள், நண்பர்கள் இத்தகையர் பல்லாயிரவர் எனற்கு ஐயமில்லை!

1931 இல் செந்தமிழ்ச் செல்வியின் கட்டுரை யாளராகின்றார். கட்டுரை முதற்கட்டுரையாக இருந்தாலும் முதன்மைக் கட்டுரையாகவே அமைந்து விடுகின்றது. ஆங்கிலம் பிரெஞ்சு இலத்தீனம் கிரேக்கம் முதலிய மொழித்திறம் பளிச்சிட விளங்கு கின்றது. "வடமொழியுள் தமிழ்ச் சொல் புகாது" என்று புலமைத் தலைக்கோல் கொண்டார் புகன்று கொண்டிருக்க “ஆமாம் ஆமாம்! தேவமொழியில் மாந்தமொழி புகக் கூடுமா?" என்று முழுதாக முடித்துவிட்டவர்கள்; 'புகும்' என்று நினைவதே பாவம் முறைகேடு எனக் கணக்குத் தீர்த்துவிட்டவர்கள் கையில், கல்விப் பொருள் இருந்த காலையில், "வடமொழி என்ன வடமொழி, எட்டாத் தொலைவில் இருக்கும் தொல் பழம் மேலை ஆரிய மொழிகளைப் பார்; அவற்றில் உள்ள தமிழ்ச் சொற்களைப் பார்; தமிழ்வேர்களைப் பார் பார்" என்று ஒன்று இரண்டு என்னாமல் ஓரைந்நூறு சொற்களைப் பட்டியிட்டு முதல் கட்டுரை வரைந்தால், அக்கட்டுரை வரைந்தவரை இருகோணத்தில்'

பார்க்க மாட்டார்களா?

C

"இப்படியொரு 'எரிமலை' வெடிக்கிறதே!" என வெதும்பல்

ஒரு பக்கம்; ஆம்; அதுவே பெரும் பக்கம்!

இப்படியொரு வான்மழை பொழிகிறதே' எனத் தளிர்த்தல் ஒரு பக்கம். ஆம்; அஃதொரு, கைவிரல்விட்டு எண்ணும் பக்கம்!

அடி அடித்தால் அம்மியும் நகராதா? 31 இல் கிளர்ந்ததிறம் முப்பது ஆண்டுகள் தொடர்ந்து பேரொளிப் பிழம்பாகச்