உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

செந்தமிழ்ச் செல்வியில் திங்களுக்கு ஒரு முறையோ, முத்திங் களுக்கு ஒரு முறையோ, இடை இடையோ 'மின்னலிட்டால்' கைவிரல்விட்டு எண்ணிய வட்டம் பெருகத் தானே செய்யும்.

பாவாணர் நல்ல பொழிஞர்; பல்வேறு மன்றங்களுக்கும், கல்லூரிகளுக்கும் அடுத்தும் தொடுத்தும் பொழிவுக்குச் சென்றுள்ளார்; மறைமலையார் உழுத முதல்உழவின் மேலுழவு செய்திருக்கிறார்; குலவொப்பு, சமயச் சால்பு ஆகியவற்றில் தலை நின்றிருக்கிறார்; சீர்திருத்தம் பகுத்தறிவு ஆகியவற்றில் பதப்பட்டு ஊறியிருக்கிறார்; பொதுமக்களொடும் ஊடாடி உறைந் திருக்கிறார்! இவ்வெல்லாமும் தொடர்பைப்பெருக்கி உள்ளன. கிளர்ந்துள்ளார்;

என

1934 தொட்டே நூலாசிரியராகக் மாணவர் நூலும் ஆய்வாளர் நூலும் இரு கூறுபடவும் நூல்கள் படைத்துள்ளார்; நூல் நாட்டம் உடையாரிடத் தெல்லாம் உள்ளகம் புகுந்திருக்கிறார்.

பாவாணர் தோற்றம் 'தோற்றமே' யாம்! 'ஏற்ற

காலம் காலமாகக் கட்டான உடற்பயிற்சி செய்த காளை யென்னப் பீடு மிக்க பெருமிதத் தோற்றம்! நெட்டை என்றோ குட்டை என்றோ சுட்ட இயலாது அளவிட்ட உயரம்; ஒல்கி என்றோதடியென்றோ உரைக்க வொண்ணா ஒத்தகனம்! கட்டி வயிரமென்று அமைந்து கண்டாரை மதிக்கவைக்கும் கவர்ச்சி! வனப்பான முகத்திற்கு வாய்த்த எடுப்பான மீசை! படிந்தும் எழுந்தும் பயின்று சுரிந்த எழில்மிக்க சுருட்டை முடி! பார்த்த அளவில் பயப்படுத்தும் பளிச்சிட்ட பார்வை! புன்முறுவல் தவழும் இதழ்! குழந்தையெனக் குலுங்கிச் சிரிக்கும் நகைப்பு! நல்லொளிப் பிழம்பாய் முல்லையரும் பையடுக்கி வைத்ததென்னப் பல்! படிந்து விடாதும் நிமிர்ந்து விடாதும் அளவாய் அமைந்த செவி! தட்டை - சப்பை கிளி மாம்பழம் என்றெல்லாம் சொல்லப் பொருந்தாமல் உடல் நூலோர் வகுத்த வகுப்பென அமைந்த மூக்கு! எந்த ஒன்றையும்கூர்ந்து நோக்கும் நோக்கு! குப்பாயமிட்டு அதன்மேல் எடுப்பாக மடித்துப் போட்ட மடிதுண்டு! ஏறுபோல் பீடு நடை! கரவற்ற உள்ளம்! கலப்பற்ற தூய பேச்சு! உள்நோக்கு நோக்கியே பழகிப்போன தனிப்பெரும் தமிழ்த்தவ அமைதி! எதிரீட்டுப் பொய்ம்மையைத் துகள் துகளாக்கும் அரிமாவீறு! - இன்னவை பாவாணரை ஒரு முறை பார்த்தாரையும் மறக்கவிடாதவை.