உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

91

இவையெல்லாமும் பாவாணரைத் தமிழகத்திற்கு அறிமுகப் படுத்தியிருந்தன. ஆயினும் அவ்வட்டம் எதிரும் புதிருமான அறிஞர்வட்டமும், ஆய்வு வட்டமுமாகவே இருந்தன! அவ்வட்டம் என்ன ஆயினும் சிறு வட்டமும் குறுவட்டமுமேயாம்! அன்றியும் அவ்வட்டம் ஈகவட்டமும் அன்று! அவ்வீகவட்டம், இள வட்டத்தில் அரும்புவது; தழைப்பது; விரிவது; பயன் தருவது! அவ்வட்டத்து நடுமணியாக நண்ணும்பேறு, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியேற்றத் தொடு பாவாணரைத் தொடர்ந்தது. அதன் தலையமைந்த விழிப்பாக்கம் பாவேந்தர் 'குயில்' கூவுதலால் உண்டாயது!

அண்ணாமலைப் பல்கலைக் கழகம்என்னும் தலைப்பில் "இளவரசர் முத்தையா அவர்கட்கு என் விண்ணப்பம்" எனத் தொடங்கி 19-8-58 (1 : 112) 26-8-58 (1: 14) 9-9-58 (1:15) ஆகிய நான்கு இதழ்களில் எழுதினார் பாவேந்தர்.

"மீண்டும் எச்சரிக்கை முறையில் இளவரசர் முத்தையா அவர்கட்கு விண்ணப்பிக்கிறோம்."

"உடனே இந்தக் குழுவில் இருந்து (திராவிட மொழி யாராய்ச்சிக் குழுவில் இருந்து சட்டர்ஜி, தெ.பொ.மீ. சேது ஆகியோர்களைப் பிடர்பிடித்து வெளியில்தள்ள

செய்யவேண்டும்.

ஆவன

"கப்பலேறிச் சென்றுள்ள நாராயணசாமிப்பிள்ளை திரும்பி வந்தால் தமிழ் ஒழிப்பு வேலைக்கு எந்த வகையிலும் ஆதரவு கொடுக்காமல்திருந்திப்பிழைக்கும் படி செய்ய வேண்டும்."

"டாக்டர் இராசமாணிக்கனாருக்கும் ஒரு வேண்டுகோள்: ஆளுக்குத் தக்கபடி வளைந்து கொடுக்கும் வேலை வேண்டாம்."

-

"டாக்டர் சிதம்பர நாதன் அவர்கட்கு விண்ணப்பம்: நீங்கள் தமிழுக்கு வாளைத் தூக்கிப் போர் செய்ய வேண்டாம். தமிழுக்குத் தீமை செய்வாரை ஒட்டிப் போகக் கூடாது.

"இராமநாதன் செட்டியாரைக் கேட்டுக் கொள்கின்றோம்: சட்டர்ஜி கூட்டத்தை ஆதரிக்கவேண்டாம்."

(4

உடனே, தமிழைத் தொலைக்கக் காப்புக் கட்டிக் கொண்டுள்ள இந்தக் கூட்டம், குழுவினின்று நீக்கப் படும் என்ற அறிகுறி ஏற்படாவிட்டால் நம் தொடக்கத் தாக்குதல் பொதுக்