உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

கூட்டக்

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

கண்டனங்களே யாகும் என்பதைத்

திருவாளர்

முத்தையா அவர்கட்குத்தெரிவித்துக் கொள்ளுகின்றோம்" என முடிக்கிறார். (9-9-58; 1 : 15)"

என்ன ஆனது? எதுவும் ஆகவில்லை! 2-10-58 இல்சட்டர்சிக்கு வெள்ளிக்கேடயம் வழங்கப் பட்டது கல்கத்தாவில்; விழா எடுத்தவர் தமிழ் எழுத்தாளர் கழகத்தார்; கேடயம் உதவியவர் கருமுத்து தியாகராசர்! "திருமுத்தமிழ் அழிக்கும் சட்டர்சிக்குக் கருமுத்து கேடயம் கொடுத்தார் எனக்கண்டித்து எழுதினார் பாவேந்தர் (7-10-58; 1 : 19)

இதனைச் சுட்டி,

"உண்மைத்தமிழரான செல்வர் இருப்பின் மறைமலை யடிகட்கும் அவர்கள் அடியொற்றுபவர்க்குமே யன்றி வங்கத்துச் சட்டர்சிக்கு வெள்ளிக் கேடயம் செல்லாது”

என்று இரங்கினார் பாவாணர் (வி.அ.க.12-2-64)

மேலும் என்ன ஆனது? பாவாணருக்குத் துறைமாறியது; வேலையும்பறிபோனது! குயிலைப் படிப்பார்

பின்னே

தமிழியக்கப் பாசறை இளவட்டங்கள் தாமே! பாவாணர்பக்கம் பார்கக பரிந்து பார்க்க ஏவியது! உறைமோர் குயில்! வெண்ணெய் திரள் 'வித்து' ஆயது அது.

-

-

தனித்தமிழ்க்கழகம், தென்மொழி, உலகத்தமிழ்க் கழகம், பாவாணர் நூல்வெளியீட்டுக்குழு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி முயற்சி -ஆயவை ஒன்றன் மேல்ஒன்றாய் உருவாகின்றன; உதவிக்கைகள் நீள்கின்றன; இந்த விழிப்பு பாவாணர்க்குக் களிப்பூட்டுகின்றது! கடமை தொடர வழியாக்குகின்றது.