உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. உலகத் தமிழ்க் கழகம்

15-4-64 இல்ஒரு கடிதம் பாவாணர் வரைந்தது; தனித் தமிழ்க்கழகம் பற்றியது.

66

இலால்குடிக் கழக உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் புலவர் சேந்தமாங்குடியார் 1960 ஆம் ஆண்டே அண்ணாமலை நகர் வந்து, 'தமிழ் நாட்டில் தனித்தமிழ்க்கழகம் தோற்றி விரிவு படுத்தவேண்டும்' என்று என்துணை வேண்டினார். யான் இசைந்தேன். மூவாண்டு ஒன்றும் தெரியவில்லை. இன்று, திருச்சி மாவட்டம் பல வட்டங்களில் தனித்தமிழ்க் கிளைகள் தோன்றி ஈராயிரம் உறுப்பினர் (ஆட்டைக் கட்டணம் அரைரூபா கட்டிச்) சேர்ந்திருப்பதாகவும் வைகாசி 4 ஆம் நாள் (17-5-64) ஞாயிறன்று என் தலைமையில் துறையூரில் முசிறிவட்டத் தொடக்கவிழா நடத்த விருப்பதாகவும் பிறமாவட்டங்களிலும் கிளைகள் தோற்றி நாளடைவில் மாநில மாநாடு நடத்துவதாகவும் எழுதியிருக் கின்றார். இதுவே, மறைமலையடிகள், நாவலர் சோ. சு. பா.வும், நானும் கண்ட கனா.பர். அரசமாணிக்கனாரும் இத்தகைய அமைப்பையே விரும்பினார்."

உறுப்பினரும், உழவரும்மாணவரும் பெரும்பாலரெனத் தெரிவிக்கின்றார் சேந்தமாங்குடியார். இவ்வியக்கம் தமிழகம் முழுதும் பரவின் தமிழுக்கும் தமிழனுக்கும் நற்காலம் அண்ணணித்தே. எதிர் காலத்தில் ஆட்சியையும்கைப்பற்றித் தமிழாட்சி நிறுவ இயலும். இதை நண்பர்க்குத் தெரிவித்து மாநாட்டுக்கு வர இயலின் வரச்சொல்க. கற்றாரையே கொண்டி ருக்கும் கழகம் விரிவடைய முடியாது, பொது மக்களும் மாணவரும் பெருவாரியாகச் சேர்ந்தால் தான் தமிழைக் காக்கவும் வளர்க்கவும் முடியும் என்பது அது. மேலும், உறுப்பினர் அனைவரும் தனித்தமிழே பேசவேண்டும் என்னும் யாப்புர வில்லை. தனித்தமிழ்ப் பற்றிருந்தாற் போதும்" (1-8-64), தமிழைக் காப்பதே என் போன்றோர் கடமை. அந் நோக்கத்துடன் பிறருடன்