உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

ஒத்துழையாதான் தமிழன் அல்லன். தனி என்ற சொல்லை நீக்கித் தமிழ்க்கழகம் என்றே பெயர் வைக்கச் சொல்லியிருக்கிறேன்” (1-9- 64) என்றும் பாவாணர் எழுதியுள்ளார்.

1959 இல் 'தென்மொழி மாதிகை' பாவலரேறு பெருஞ் சித்திரனாரால் தோற்றுவிக்கப்பட்டது. அதன் சிறப்பாசிரியராகப் பாவாணர் விளங்க வேண்டுமெனச் சித்திரனார் அவாவினார். பாவாணரும் இசைந்தார். ஆனால், பல்கலைக்கழகம், பாவாணர் அப்பொறுப்பை ஏற்க இசைவு தரவேண்டுமே! அதனை மறுத்தது. அந்நிலையில் பல்கலைக் கழகம் சைவு தந்துதவுமாறு தென்மொழி ஒரு வேண்டுகை விடுத்தது.

சிறப்பாசிரியர்

தென்மொழி என்னும் பெயர்பூண்டு வெளிவரும் இவ் விதழ்க்குச் சிறப்பாசிரியராகவிருக்க திராவிட மொழியாராய்ச்சி வல்லுநர் புலவபண்டித வித்துவ ஞா. தேவநேயப்பாவாணர் எம்.ஏ. அவர் தம்மை நாம் வேண்டிக் கொண்டதற் கிணங்க அவரும் உளமுவந்து இசைந்தாராயினும், அவர்செந்தமிழ்த் தொண்டாற்றி வரும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார் இன்னும் இசைவு தராமையினால்அவர் அப்பொறுப்பினை ஏற்க இயலாது போனமை பற்றி மிகவும் வருந்துகீன்றோம். விரைவில், அண்ணாமலையாரின் முந்து தமிழ்ப் பல்கலைக் கழகம் இச்செந்தமிழ்த் தொண்டை ஏற்க அவர்க்கு இசைவு தந்துதவுமாறு அக்கழக வேந்தரைப் பல்லாற்றானும் வேண்டிக் கொள்கிறோம்.

இயல் 1. இசை. 2

17- 8 - 59

ஆசிரியர், தென்மொழி

இவ்வேண்டுகைக்குப் பின்னரும், தென்மொழிச் சிறப்பாசிரிய மேற்கோளுக்குப் பல்கலைக்கழகம் இசைந்திலது; இசையாது என்பதும் வெளிப்படை. "காற்றைப் போல விடுதலை; கட்டில்லாத விடுதலை" என்ற நிலைமை உண்டாகிய பின் எவர் இசைவு வேண்டும்? பாவாணர் சிறப்பாசிரியராக வள்ளுவராண்டு 1994 மாசி (1963 பிப்ரவரியில் அமர்ந்தார். இடை நின்ற தென் மொழி இதழ் தொடரந்தது!

"நடைமெலிந்த தென்மொழி மீண்டும், படை வலிந்து எழுந்தது” எனக் கிளர்ந்தது. பாவாணரால் தென்மொழியும், தென்மொழியால் பாவாணரும் கொண்டும் கொடுத்தும்