உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

95

இருபாலும் பெற்ற நலங்கள் தமிழிதழியல் -தனித்தமிழ்- வரலாறுகளில் சிறப்பான இடம் பெறத்தக்கனவாம்.

தென்மொழியின் பொறுப்பாசிரியர் பாவலரேறு பெருஞ்சித் திரனார். பேராசிரியர் இலெனின் தங்கப்பா, பேராசிரியர் தமிழ்க்குடிமகனார் திரு. செம்பியன் ஆகியோர்உறுப்பாசிரியர். பாவாணரைப் பற்றிய செய்திகள், துடிப்புமிக்க இளைஞர்கள், துணிவுடைய செயல் வீரர்கள் ஆகியோர்க்குக் கிடைக்கும் வண்ணம் செய்தது இத் தென்மொழி. பாவாணர்க்கு உதவும் வகையில் பொருள் திரட்டல், பாவாணர் புலமைச்சுரப்பு தமிழுக்குப் பயன்படும் வகையில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி உருவாக்கத்தில் உதவல், உலகத் தமிழ்க்கழகம் என்னும் அமைப்பை உருவாக்கித் தமிழக மன்றி மொழி பெயர் தேயத்தும், கடல்கடந்த நாடுகளிலும் பாவாணர் புகழ் பரப்புதல் ஆகிய சீரிய கடமைகளைச் செய்தது. பாவாணரைப் பற்றிய செய்திகளை அன்றி, அவர்படைப்புகளும் தாங்கிவந்தது தென்மொழி. அவ்வகையில் பரப்பாண்மையொடு புரப் பாண்மை பாதுகாப் பாண்மையாகிய முத்திறக் கடப்பாடும் கொண்டது தென்மொழி.

1963 திசம்பர்த் திங்களில் பாவாணருக்காகப் பொருட் கொடைத் திட்டம் ஒன்றனை உருவாக்கியது. 6-7-64 இல் திட்டம் முடிக்கப்பட்டது. அக்கால எல்லையில் தொகுக்கப்பட்ட உரூபா 2211-04 பாவாணர்க்கு வழங்கப்பட்டது.

1956 இல். தென்மொழிக்கு ஒரு சிக்கல்நேர்ந்தது. அதனை உறுப்பாசிரியருள் ஒருவராகிய பேரா. தமிழ்க் குடிமகனார் வரைகன்றார்:

1965 ஆம் ஆண்டில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போர் உச்சமாக இருந்த நேரம். தென்மொழி இதழுக்கும் கொள்கை வழியில் சிக்கல் நேர்ந்தது. இந்திதொடர்பாக வெளியிடப்படும் கருத்துகள் அரசினரால் ஊன்றிக் கவனிக்கப்பட்டன. எருமை ஒன்று குத்துவாள் வீச்சுக்கு ஆட்பட்டுக் குருதி சிந்த ஓடுவதாக ஒரு முகப்புப் படம் வந்தது. கடுமையான இந்தி எதிர்ப்புடன் சிவப்புமையில் அச்சிடப்பட்டு ஆசிரிய உரையும் வந்தது. இந்த இரண்டுக்குமாகச் சேர்ந்து அரசினரால் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன. இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி (Defence of India Rules) தொடரப்பட்ட வழக்கில் தென்மொழியின்