உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

சிறப்பாசிரியர் பாவாணர் பெயர்தான் முதற் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டது. மற்றும் பெருஞ்சித்திரன், தங்கப்பா, சாத்தையா (தமிழ்க்குடிமகள்), செம்பியன் ஆகியோர் குற்றவாளிகள்.

பாவாணர் இந்தி எதிர்ப்புக் கருத்தில் மிக அழுத்தமானவர் என்றாலும் அவரை வழக்கில் சேர்ப்பது முறையற்றதாக இருந்தது. அவர் எழுதாத கட்டுரைக்கு அவர் மீது ஏன் வழக்கு வரவேண்டும்? எனவே பெருஞ்சித்திரன், தங்கப்பா, சாத்தையா மூவரும் அவற்றுக்குப் பொறுப்பேற்றதாலும் பாவாணர்க்கும் அக் கட்டுரைக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்து விட்டதாலும் அவர் பெயர் வழக்கில் இருந்து நீக்கப்பட்டது. அதன் பின்னர் ஓராண்டுக் காலம் நடைபெற்ற வழக்கில் தங்கப்பாவும் சாத்தையாவும் விடுதலைசெய்யப்பட்டனர்.பெருஞ்சித்திரனார்க்கு 200 உருபா தண்டம் அல்லது நான்கு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டம் கட்டமறுத்து அவர்சிறை சென்றார். சிறை சென்ற தாலேயே அஞ்சல் அலுவலகத்தில் அவர்க்கிருந்த பதவியும் பறிபோனது. பாவாணரைப் போலவே பெருஞ் சித்திரனாரும் வறுமையில் வாடநேர்ந்தது என்பது அது (பாவாணரும்தனித்தமிழும் பக். 18, 19).

இவ்விடத்தில் உலகத் தமிழ்க் கழகத் தோற்றம் பற்றியும் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

புலவர் சேந்தமாங்குடியாரால் தோற்றுவிக்கப்பட்ட தனித்தமிழ்க் கழகம் பற்றிய செய்தியை அறிந்துள்ளோம். அவ்வியக்கத்தைத் தமிழகம் முழுவதும் விரிக்க வேண்டும் என்றும், உழவரும் மாணவரும் பொதுமக்களும் உறுப்பினருள் பெரும் பாலானவராக இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்குத் தமிழ்ப்பற்று இருந்தால் போதும் என்றும் குறித்தவற்றையும் அறிந்துள்ளோம். அவற்றையெல்லாம் உட்கொண்டு 6-10-1968 இல்திருச்சியில் அமைப்புக் கூட்டமொன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில்தான் உ.த.க. எனப்படும் உலகத் தமிழ்க் கழகம் ருக் கொண்டது; தனித்தமிழ்க் கழகம் உ.த.க.வுடன் ஒன்றி விட்டது,

உ.த.க.வின் தோற்றத்தை அதன் நிலைத்தபொருளாளர் எனப் பாவாணரால்பாராட்டப்படும் செங்கை செந்தமிழ்க் கிழார்

கூறுகின்றார்: