உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

97

"தமிழன்பர்களின் திருக்கூட்டம். திருக் கூட்டத்தின் நடுவே அரிமா போன்று பாவாணர் அவர்கள். அன்பர்களை நோக்கி அவர்தம் குரல் மறைமலையடிகள் தாம் தூய தமிழியக்கத்தைத் தோற்றுவித்தார். அவர்தாம் இந்தியினால் ஏற்படும் கேடுகளைத் தமிழர்க்குத் தெள்ளத் தெளிவாகக் கூறி இந்தி எதிர்ப்பு இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்தினார். அதன் பின்னர்த்தான் தமிழார்வம் தழைத்தோங்கத் தலைப்பட்டது: அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழர்களிடம் ஏற்பட்ட தமிழ்ப் பற்றைத் தங்கள் கட்சியின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். அரசியல் தலைவர்கள் தங்கள் நலனுக்காகத் தான் தமிழைப் போற்றுகிறார்கள். உண்மையில் தமிழை வளர்க்கும் பணியில் அவர்கள் ஈடுபடவில்லை. தமிழ்ப் புலவர்களுக்கும் தமிழைப் பற்றிக் கவலையில்லை. எனவே, தமிழை முதன்மையாக வைத்துத் தமிழைப் போற்றி வளர்க்கும் ஓர் இயக்கம் தேவை. அந்த இயக்கத்தைத் தோற்றுவிக்கும் குறிக்கோளுடன்தான் நாம் இங்குக் கூடியிருக்கிறோம்" இந்தக் கருத்தில் பாவாணர் அவர்கள் கூறிய சொற்கள் தமிழன்பர்களின் உள்ளத்தைத் தொட்டன. அன்பர்கள் அவர் தம் விழைவைச் செயற்படுத்த உறுதி பூண்டனர். அதன் பின்னர்ச் சில திங்களில் அன்பர்களின் ஒத்துழைப்புடன் பாவாணர் அவர்கள் தி.பி.1999 (கி.பி. 1968) ஆம் ஆண்டு திருச்சியில் தமிழ்க் கழகத்தைத் தோற்றுவித்தார்கள்" என்பது.

உ.த.க. வின் தலைவர் பாவாணர்; பொதுச் செயலாளர் பெருஞ்சித்திரனார் ; துணைப் பொதுச் செயலாளர் இறைக் குருவனார்; பொருளாளர் செங்கை செந்தமிழ்க் கிழார்; மாவட்ட அமைப்பாளர்கள் தமிழ்க் குடிமகனார். சேந்தமாங் குடியார், இரா. இளவரசு, பா.வளனரசு, மி.மு.சின்னாண்டார், வி.பொ. பழனி வேலனார் ஆகியோர்.

உ.த.க. முதலாண்டிலேயே பக்கமெல்லாம் வீழ்ந்துவிட்டுப் பரவிய ஆலென விளங்கியது; மாவட்டத் தலைநகர்களிலும், நகரங்களிலும் சிற்றூர்களிலும் உ.த.க. கிளைகள் உண்டாயின. பாவாணர்புகழும், தென்மொழித் தொண்டும், உ.த.க. செயலாண்மையும் ஒருமுகமாக வளர்ந்து வந்தன.

உ.த.க. தலைவராக அன்பர்கள் பாவாணரையே கொண்டி ருந்தனர். ஆனால் பாவாணரோ, தம்மை உ.த.க. தலைவராகக் கொண்டதிலர். 'மறைமலையடிகளே உ.த.க. தலைவர்; யான் அவர்