உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

தம் தூய

தமிழ்

தொண்டனே'

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

இயக்கத்தை

என்று

வழிநடத்திச் அன்பர்களிடத்தும்

செல்லும்

உ.த.க.

நிகழ்ச்சிகளிலும் கூறி வந்தார்.

இயக்கப் பொறுப்பில் பாவாணர் எப்படி இருந்தார்? உ.த.க. பொறுப்பாளர்கள் கழகத் தொடர்பான அன்பர்களுக்கு எழுதிய மடல்களை விடப் பாவாணர் அவர்கள் தம் கைப்பட எழுதிய மடல்களே எண்ணிக்கையில் மிகுதி. உ.த.க. வளர்ச்சியில் பொறுப்பாளர்கள் யாவரின் உழைப்பும் பாவாணர் அவர்களின் உழைப்புக்கு ஈடாகாது என்கிறார் செந்தமிழ்க்கிழார். மேலும்ஓர் அரிய குறிப்பைக் கிழார் சுட்டுகிறார்:

"உ.த.க. அன்பர்கள் ஐயாவின் நலனில் அக்கறை கொண்டு உழைத்ததுண்டு. உத.க. அன்பர்கள் ஐயாவின் புலமை தமிழகத்திற்குப் பயன்பட வேண்டும் என்ற முயற்சிகளில் ஈடுபட்டதுண்டு.ஆனால் உ.த.க. வைத் தந்நலத்திற்காக ஐயா அவர்கள் பயன்படுத்தக் கருதியதே இல்லை. தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ள உ.த.க.வை ஐயா அவர்கள் கருவியாகக் கொள்ள எண்ணியதே இல்லை” என்பது அது.

கழகத்தின் ஆண்டு விழாவும் திருவள்ளுவர் ஈராயிர ஆண்டு விழாவும் 1969 திசம்பர் 28, 29 ஆகிய நாள்களில் முகவை மாவட்டத்துப் பறம்புக்குடியில்ஒரு பெரிய அரசியல் கட்சியின் மாநில மாநாடென நடை பெற்றது. அனைத்து ஏற்பாடுகளையும் பொறுப்பேற்று நடத்தியவர் பேரா. தமிழ்க் குடிமகனார். அம் மாநாட்டிலே பாவாணர் இயற்றிய திருக்குறள் மரபுரை வெளியீடும் நிகழ்ந்தது. பாவாணர் இயற்றிய இசையரங்கு இன்னிசைக் கோவையும் தமிழ் கடன் கொண்டு தழைக்குமா? என்னும் கட்டுரைச் சுவடியும் உ.த.க. சார்பால் வெளியிடப் பட்டன. பாவாணர் நூல்கள் மாநாட்டில் விற்றவகையில் உரூபா 2000 வரை சேர்ந்தது.

மாநாட்டு ஊர்வலம், மக்கள் பெருக்கம், நிகழ்ச்சிச் சிறப்பு, கலந்துகொண்ட அறிஞர்கள் பாவலர்கள் உணர்வு, தொண்டர் களின் ஆர்வப் பெருக்கு - இன்ன வெல்லாம் பாவாணரைப் பூரிப்படையச் செய்தன. இவ்வகையில் உ.த.க. ஏழெட்டாண்டுகள் சிறப்பாகவளர்ந்தால் தமிழ்நாட்டு அரசையும் பிடிக்கும் வலிமையுடையதாகத் திகழும் என உவப்புற்றார். மாநாட்டுப்