உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

99

பொறுப்பாளராக இருந்து சிறக்கச் செய்த தமிழ்க் குடிமகனார் அமைச்சராகி ஆட்சி நடத்தும் நிலையும் நேரலாம் என நேரிலும் கூறினார்; எழுத்திலும் எழுதினார் பாவாணர்; அவ்வளவு பெரு நிறைவைத் தந்தது அம் மாநாடு! "அவர் வறுமைப்பட்ட காலம் உண்டு. வாடிவதங்கிய காலம் உண்டு. ஆனால் அவர் காலத்தில் அவரால்தான் தனித்தமிழ் இயக்கம் மிகப் பெரிய அளவில் 140 கிளைகட்கு மேல் கொண்டு நிமிர்ந்து நின்றது என்பதனை யாரும்மறுக்க முடியாது. மிகப் பெரிய அறிஞர் என்னும் முறையில் அவரது நூல்களைப் படித்தே ஒருவன் மிகப் பெரிய அறிஞனாக முடியும் என்னும் அளவிற்கு அவர் ஆழமானவர் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது” என்று தமிழ்க் குடிமகனார் கூறும் தேர்ச்சியுரை களெல்லாம் ஒருங்கே பளிச்சிட்ட இடமாக அன்றோ பறம்புக்குடி மாநாடு விளங்கியது! பாவாணர் பூரிக்க மாட்டாரா? பாராட்ட மாட்டாரா?

பேராசிரியர் இலக்குவனார், புலவர் குழந்தை, முனைவர் வ.சு.மாணிக்கனார், தவத்திரு குன்றக்குடி அடிகளார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலாகப் பேரறிஞர் மிகப் பலர் கலந்து கொண்ட மாநாடு அது.

29

இரண்டாம் மாநாடு மாமதுரையில் 9-1-71, 10-1-71 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது. 9-1-71 காலை 9 மணியளவில் மாநாடு நடைபெற இருந்த வெற்றித் தனிப் பயிற்சிக் கல்லூரி (V.T.C.) யில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு நகர்மன்றச் சாலை. மாசி வீதிகள் வழியே விழா மண்டபத்தை அடைந்து விழாத் தொடங்கியது. பாவாணர் விழாத் தலைமையேற்றார். மாநாட்டு வரவேற்புக் குழுத்தலைவரும், மதுரை மாவட்ட உ.த.க. அமைப்பாளருமாகிய வையை நம்பி வரவேற்றார். புலவர் வில்லவதரையர், நிலவழகனார், க.ப. அறவாணர், வி. மதியழகனார், பா.வளனரசர், எண்கவனகர் பெ. இராமையா, புலவர்மி.மு. சின்னாண்டார், பேரா.மு.இளமாறனார், பேரா. சொல் விளங்கும் பெருமாள், சி.சு. மணி ஆகியோர் முதல்நாள் நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.

இரண்டாம் நாள் மாநாட்டு நிகழ்ச்சிகளாகப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தலைமையில் பாட்டரங்கும், பன்மொழிப் புலவர் அப்பாத் துரையார் தலைமயில் அரசியல் அரங்கும்,