உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

103

மல்லேன், இவ்வுலகிலுள்ள உண்மைத்தமிழர் அனைவரும் என்றுங்கடப் பாடுடையர்" என நன்றியுரைக்கும் பாவாணர் ஒரு பதிகம் பாடியுள்ளார்.

“செட்டிகுளத் திற்குளித்த செந்தமிழ்த்தாய் செங்காட்டுப்

பட்டியில்வந்து பருகப்பால் - அட்டியது

போல்வதே மீண்டும் பொலிந்தெழுந்த பாவாணர் நூல்வெளி யீட்டுக் குழு’

என்பது முதல் வெண்பா.

“பாங்கா யமர்தலைமைப் பச்சைமுத்து நாகமுத்து ஓங்கும் இராமுபுல வேணுகோபால் - தாங்கும் பொதுமது செல்வராசன் போற்றும்பா வாணர் புதுமுது நூல்வெளியீட் டார்’

என்னும் இரண்டாம் வெண்பா குழுவையே தன்னுள் அடக்கி வைத்துள்ளது! கொடையாளர் பட்டியல் நூலின் இறுதியில் உள்ளது. துறையூர் பிரசன்னாதிரையரங்கில் நிகழ்ந்த விழாவிற்கு வந்திருந்த அன்பர்களும் உருபா 338-42 வழங்கியுள்ள சிறப்பும் நூலில் பொறிக்கப்பட்டுள்ளது. செந்தமிழ்ச் செல்வியில் வெளிவந்த செய்தி வருமாறு:

வள்ளுவராண்டு 1997 புரட்டாசி 30 ஆம் நாள் (6-10-66) ஞாயிறு காலை 10 மணிக்குத்துறையூர் பிரசன்னா திரைப்பட அரங்கில் தவத்திரு.குன்றக்குடி அடிகளார் தலைமையில் மொழியியல் அறிஞர் பாவாணர் அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

அடிகளார் அவர்கள் பாவாணரின் மொழிநூற் புலமையை யும் அவர் தமிழுக்குச் செய்துள்ள தொண்டு களையும் பாராட்டிப் பொன்னாடை போர்த்தி, செங்காட்டுப்பட்டி பாவாணர் நூல் வெளியீட்டுக் குழுவினரால் திரட்டப்பட்ட உரூபா 4001 கொண்ட பொற்கிழியையும் அளித்துச் சிறப்பித்தார். பாவாணர் தம் நன்றியுரையில் தமக்கு அளிக்கப்பட்ட நன்கொடையைக் கொண்டு 'தமிழ்வரலாறு' 'வடமொழி வரலாறு' ஆகிய ரு நூல்களை வெளியிடுவதாக அறிவித்தார்.

செந். செல். 41:135