உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. நூல் வெளியீட்டுதவிகள்

1. திருச்சிமாவட்டப் பெரம்பலூர் (பெரும்புலியூர்) வட்டம் செட்டிகுளம் பாவாணர் நூல்வெளியீட்டுக்குழு:

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் என்னும் நூல் (1966) வெளிவர இக்குழு உதவியுள்ளது.

"இந்நூல் வெளியீட்டிற்கு ஓராயிரம் உருபா தொகுத்துதவிய திருச்சிமாவட்டப் பெரம்பலூர் வட்டச் செட்டிகுளத்துப் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழுவிற்கு நான்மட்டுமல்லேன், உண்மைத் தமிழர் அனைவருமே என்றும் கடப்பாடுடையர்” என நன்றியுரைத்து மூன்று வெண்பாக்கள் பாடியுள்ளார் பாவாணர். நன்கொடைப்பட்டியல் விளக்கத்தைப் பின்னே இணைத்துள்ளார். "செந்தமிழ் அன்னை செழியன் தமிழ்நாடும் வெந்தழல் ஆரிய வெம்மையால் - வந்தே குளிர்ச்சி பெறத் தோழியொடு கூடி மகிழ்ந்து குளிப்பது செட்டி குளம் "

என்பது மூவெண்பாக்களுள் நடுவணது. இக்குழுவின் தலைவர் திரு.மு.பச்சைமுத்து அவர்கள் ஊராட்சித் தலைவர்.பொருளாளர் அர.நாகமுத்து அவர்கள்; குழு உறுப்பினர் அறுவர்.

2. திருச்சி மாவட்டப் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழுவின் செங்கைப் பகுதி:

இதன் உதவியால் வெளிவந்த நூல்கள், தமிழ் வரலாறு, வடமொழி வரலாறு என்பவை, (1967).

"இந்நூலும் வடமொழி வரலாறு என்னும் இன்னூலும் வெளியிட நாலாயிரம் உருபா தொகுத்து நல்கிய திருச்சி மாவட்டப் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழுவின் செங்கைப் பகுதிக்கு, சிறப்பாகத் திருவாளர் நா. செல்வராசனார்க்கு நான்மட்டு