உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

101

மொழியும் அதன்பின் மீட்போலையும் உ.த.க. இதழாயின. முறையே, இவற்றின் ஆசிரியர்கள் பேரா. தி.வை. சொக்கப் பனாரும் பரோ. கு. பூங்காவனரும் ஆவர். அறிவு தமிழம் வலம்புரி என்பனவும் உ.த.க. செய்திகளைத் தாங்கி வந்த இதழ்களாம்.”

உ.த.க. வில் இருந்து பெருஞ்சித்திரனாரின் உலகத் தமிழ் முன்னேற்றக் கழகம் பிரிந்தது. பின்னர்த் 'தமிழியக்கம்' தமிழ்க் குடிமகனாரால் காணப்பட்டது. முன்னதன் இதழாகத் தென்மொழி தொடர்ந்தது. பின்னதன் இதழாகக் 'கைகாட்டி' கிளர்ந்து அமைந்தது. பாவாணர் வரலாற்றுக்கு ஏற்ற வகையில் இச்செய்தி களின் அளவில் அமைந்து, உ.த.க. எழுச்சியாலும் உதவும் பான்மையாலும் உருவாகி உதவியாகித் தமிழ் வளம் சேர்த்த பாவாணர் நூல் வெளியீட்டுதவிகளைப் பற்றிக் காணலாம்.