உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

ஒல்வதோ பெரும உரையும் மிகலே அதனால்,

வாழிய வாழிய வண்டமிழ்க் கென்றேயிவ் வாழிசூழ் வையத் தமைந்து நலமுறை ஊழி பலவென் றுவந்தேம் வழுத்துதும் வாழிய செந்தமிழ் வான்"

105

பாடல் அமைதிக்கும் நயத்திற்கும் இவ்வடிகள் காட்டு; இதனை யாத்த பாவலர் இப்பாவன்மையிலேயே ஊறிப் பழுத்திருந்தால், இந்நூற்றாண்டும் ஒரு பரிபாடல் தொகை வளம் பெற்றிருக்குமே தமிழ்மொழி!

செங்கைக்கிழார், செங்கைப் பொதுவனார், செங்கை மதுவனார் ஆகிய தமிழ்த் தொண்டர்களால் தைப் பொங்கல் விழாவுக்குப் பயன்படும் வண்ணம் ஆண்டு தோறும் தொடர்ந்து 60 உரூபா நன்கொடை விடுக்கப் பட்டமையும் இவ்விடத்தே நினையத் தக்கவொரு செய்தியாம்.

3. புத்தனாம்பட்டி பாவாணர் நூல் வெளியீட்டுக்குழு:

செட்டிகுளம், செங்காட்டுப்பட்டி, துறையூர் ஆகிய டங்களில் பாவாணர்க்குச் செய்யப்பட்ட சிறப்புகளை உணர்ந்து ஈடுபட்டுத் தோன்றியது புத்தனாம்பட்டி பாவாணர் நூல் வெளியீட்டுக்குழு பாவாணர் பெயரால் மன்றம் கண்டு ஆர்வத்துடன் உழைத்த அன்பர் ஆசிரியர் அ. முருகன் ஆவர், 27- 10-68 இல் விழா எடுத்துப் பாவாணர்க்குப் பொன்னாடை போர்த்திப் பொற்கிழியும் வழங்கினார். பாவாணர் தமக்கு வழங்கப்பட்ட பொற்கிழியால் திருக்குறள் - தமிழ் மரபுரை வெளியிடப் பெறும் என்று விழாமேடையில் கூறிய செய்தி அறிய வருகிறது (பாவாணர் பெருமை. 84)

4. புன்செய்ப் புளியம் பட்டி மறைமலையடிகள் மன்றப் பாவாணர் நூல்வெளியீட்டுக்குழு:

இக்குழுவின் விருப்பிற்கு இணங்கிப் பாவாணர் எழுதித் தந்த சுவடி, "இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?' என்பது, இதன் வெளியீட்டுக்கு இக்குழு தண்டியளித்த உரூபா 1500. குழுவுறுப்பு மன்றங்கள்: