உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

1) புன்செய்ப்புளியம்பட்டி - மறைமலையடிகள் மன்றம்

2) புன்செய்ப்புளியம்பட்டி - இளங்கோமன்றம்

3) நம்பியூர் மறைமலையடிகள் மன்றம்

4) அவிநாசி - முத்தமிழ்மன்றம்

5) அவிநாசிக்கருக்கங்காட்டுப்புதூர் - திருவள்ளுவர்

6) அவிநாசி - திரு.வி.க. மன்றம்

மன்றம்

7) அவிநாசிக்கருக்கம் பாளையம் - பாரதிமன்றம் குழுச்செயலாளர் ப.கு. சுப்பையனார் என்ற முருகவேளார். துணைச்செயலாளர்கள் பு.கா. இளமுருகனார் நா.த.

ஆடரசனார்.

5. பாவாணர் மணிவிழாக்குழு ; மதுரை :

மதுரையில் அமைக்கப்பட்ட மணிவிழாக் குழுவின் சார்பாகப் பாவாணர் நூல் வெளியீட்டுக்கு வழங்கிய நன்கொடை உரூபா 7000. அத்தொகையால் உலகமுதற் செம்மொழி என்னும் ஆங்கிலநூலும், தமிழர் வரலாறு என்னும் நூலும் (1972) வெளியிடப்பட்டன. மணி விழாத்திறம் விழாவும், விருதும் என்னும் பகுதியில் காண்க.

6.சிங்கை நன்கொடையர் முல்லைவாண முல்லைச் செல்வியர்:

சிங்கை நன்கொடையாளர் குழுவினர் பதினெண்மர். அவர்கள் நன்கொடையால் கிடைத்த தொகை உரூபா 3100 ஐக்கொண்டு வெளிவந்த நூல் தமிழர் மதம் ஆகும் (1972). முல்லைவாண முல்லைச் செல்வியர் நன்கொடையில் முன்னின்றுளர். வெண்பாக்கள் ஆறு அவர்களுக்கும் நன் கொடையாளர் பெயர்ப்பா அகவலொன்றும் பட்டியலும் இடம் பெற்றுள. 7. நெய்வேலி உ.த.க.

15

'மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை" (1978) நெய்வேலி உலகத் தமிழ்க் கழகக் கொடையால் வெளிவந்தது.