உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

"நெய்வேலி உ.த.க. நேயர் தமிழ்காக்கும் மெய்வேலி யாகி மிளிர்ந்தனர்காண் - மொய்வேலின் மண்ணில்விண் ணிற்கு மகிழ்ந்தளித்த வெண்பொற்கா செண்ணின்முன் மூவா யிரம்.

107

என்பது நன்றியுரை! அமைப்பே பொறுப்பேற்றுக் கொண்ட அருமையது இது! நெய்வேலி உ.த.க. செயலாளர் அன்புவாணன் வெற்றிச் செல்வியர்.

8. முக்கூடல் அரிராம் சேட்டு நினைவுக்குழு :

“The Primary classical Language of the world” என்னும் ஆங்கில நூல் வெளியீட்டுக்கு உதவியவர்கள் நெல்லை மாவட்ட முக்கூடல் அரிராம் சேட்டு நினைவு அமைப்புப் பணியினராவர். அதன் தலைவர் ஆர். ஆர.கே. கெருடலிங்கம் என்பார் (ஆண்டு 1966)

9-4-66 ஆம் நாள் காரிக்கிழமை முக்கூடலில் உயர்திரு அரிராம் சேட்டு அவர்களின் 34 ஆம் பிறந்த நாட் பெருவிழாவும் உலக முதல் உயர்தனிச் செம்மொழி என்னும் நூல் வெளியீட்டு விழாவும் நிகழ்ந்தன.

முற்பகலில் கொடை வள்ளல் அவர்களின் ஆவி அமைதியுற றை வழிபாடும், பிற்பகலில் அவர்திருப்பட ஊர்வலமும் நிகழ்ந்தன. மாலை 6 மணிக்குக், கொடை வள்ளல் அவர்களுக்குப் படையலாக வெளியிடும் உலக முதல் உயர்தனிச் செம்மொழி (The Primary Classical Language of the World) என்னும் நூலின் வெளியீட்டரங்கு தொடங்கியது. விழாத் தலைமை ப-ர்.சி. இலக்குவனார் ஏற்றிருந்தார்.அ.கி.பரந்தாமனார், மணித் தாமரையார், திருமாறனார் ஆகியோர் நூலைப் பாராட்டிப் பேசினர். ப-ர். மெ. சுந்தரனார் நூலின் படியொன்றைக் கொடைவள்ளலின் மூத்த மகனாரிடம் வழங்கினார். தலைவர் நிறைவுரைக்குப் பின் சின்னராசு நன்றி கூறினார்.

9.சிங்கபுரி வெ. கோபால கிருட்டிணனார் (கோவலங் கண்ணனார்)!

தனிக் கொடையால் 'தமிழ் இலக்கிய வரலாறு' (1979) வெளிவர உதவிய தாளாளர் கோவலங் கண்ணனார். இவரைப் பற்றிப் பாவாணர் பாடியது பாடாண் பதிகம்: