உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. தேடிவரு திருவுக்கு மூலம்

பாவாணர்

நூல்களை வெளியிடுதற்குக் குழுக்கள் எழுவானேன்? பாவாணர் ஆய்வுக்குத் தடை கூடாது என முழங்குவானேன்? செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலிக்கு உதவத் தமிழார்வலர் நூற்றுக்கணக்கில் கிளர்வானேன்? செந்தமிழ்ச் செல்வி, தென்மொழி, முதன்மொழி, தமிழ்ப்பாவை, தமிழம், குயில், வலம்புரி இன்ன தாளிகைகள் பறையறைவானேன்? ஆங்காங்குள்ள அமைப்புகளும், உ. த. க.வும்பாவாணர் பணிக் குதவுமாறு தீர்மானங்கள் போட்டும் முறையிட்டும் கடனாற் றுவானேன்? இவற்றுக் கெல்லாம் ஒரே மறுமொழி, "இவை யெல்லாம் பாவாணரைப் புரிந்துகொண்டன" என்பதே!

பாவாணர் மூளைக் கூர்ப்பு கணினியைக் கண்டான் கூர்ப்புக்குக் குன்றாதது! அணுவைக் கண்டான் அறிவுக்குப் பிந்தாதது! தங்க வயிரச் சுரங்கங்களை அறிந்தான் பேரறிவுக்குச் சளையாதது! கல்லினைக் கருவிக் கொண்டு காலந் தீர்மானிக்கும் தொல் துறை வல்லானினும் இளையாதது! பன்மொழி வல்லார் எவரினும் பின் வாங்காதது! சொல்லய்வுக்கெனவே சுடர்ந்த சுடரொளி அது எனக் கண்டு கொண்டது ஆர்வலர் உலகம்! அவர்க்கு உதவுதல் பிறவிப் பேறு எனவும் கொண்டது! தன்னலமில்லாத் தமிழ் நலத்தொண்டுக்கு, மொழிநலப் புரட்சி முகிழ்ப்புக்கு உதவுதல் 'என்றலைக் கடனே' எனக் கொண்டது!

www

-

ஐம்பான் ஆண்டுகள் வேர்ச் சொல்லய்வில் செலவிட்டவர்

பாவாணர்.

"வேர்ச் சொற்கள் சிறுவேரும் பெருவேரும் என இருவகைய அவற்றுள் முன்னவை பன்னூற்றுக் கணக்கின. பின்னவை ஒரு நூற்றிற்குட்பட்ட வை இவ்வுண்மை என் கடந்தஅரை நூற்றாண்டு மொழியாராய்ச்சியிற் கண்டது" (வேர்ச்சொற் கட்டுரைகள் முகவுரை);"ஐம்பான் ஆண்டாக மொழியாராய்ச்சி செய்து" (வே. சொ.க. 202); வாழ்நாள் முழுதும் வேர்ச்சொல்ஆராய்ச்சியில் முழுகிக் கிடந்த ஒருவன் (வே.சொ.க.முகவுரை) என்பவை பாவாணர் எழுத்துகள்.