உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

பாவாணர் தாம் எடுத்துக் கொண்ட ஒரு கருத்தை நிறுவுதற்கு நாட்டு வழக்கைக் காட்டுவார் ; நாட்டின் உட்பிரிவாம் மாவட்ட வழக்கைக் காட்டுவார்; வட்டார வழக்கென்றும் சுட்டுவார்; உள் வட்டார வழக்குகளையும், ஊர் வழக்குகளையும் குறிப்பார்; உலக வழக்கையும் குடிவழி தொழில் வழி வழக்குகளையும் தெரிவிப்பார்; பொதுவாக வழக்கு என்று கூறும் அளவிலும் அமைவார். இவ்வாறு உலகியல் வழக்குகளிலும் செய்யுள் வழக்குகளிலும் தழும்பேறியவர் பாவாணர்.

உலகியல் வழக்குத் தேர்ச்சிக்கும் தொகுப்புக்கும் அடிக்களம் தமிழ் கூறும் பரப்பெல்லாம் தொடர்பிருத்தல். அத் தொடர்பு பாவாணர்க்கு இருந்ததா?

பாவாணர்பிறப்பும்உயர்பள்ளிக் கல்வியும் நெல்லை மாவட்டத்தவை; முகவை மாவட்டத்தில் பணி தொடங்கினார்; மதுரைத் தொடர்பும்மிக்கிருந்தது; பண்டிதத் தேர்வு பெற்றதும், மணிவிழாக் கண்டதும், காப்புக் கழகஞ் சார்ந்ததும், திருநகர்க் குடியிருப்பு அவாவியதும், தமிழ்ப்பாவை தமிழ் எழுத்தாளர் மன்ற நெருக்கமும் மதுரை சார்ந்தவை. தஞ்சை மாவட்டத்து மன்னார் குடிப்பணி சோழ நாட்டுப் பரப்பைக் காட்டியது; திருச்சி வாழ்வு நடுமண்டலத்து நயப்பாட்டை அருளியது; சேலத்து வாழ்வு ஈரோடு கோவை நீலமலை இன்னவற்றையும் ணைத்தது; ஆம்பூர் வாழ்வும் பணியும் ஆர்க்காட்டொடு தொடர்புறுத்தியது; வேலூர்க் காட்டுப்பாடி வாழ்வும் ஆர்க்காட்டு மாவட்டப் பெருக்கமும் தந்ததே. இடை டையும் கடைசி நாளும் சென்னை உறைவு செறிந்தது!

எங்கும் அலைவு! எப்பொழுதும் அலைவு! பாவாணர் வாழ்வியலுக்கு இவ்வலைவுகள் இடரும் தடையும் இடையறாது தந்தவையே. எனினும் எத்தனை எத்தனையோ வகைகளில் வட்டார வழக்குகளைத் தொகுத்துத் தமிழ் வைப்பாக்கிக் கொள்ள வாய்த்த வாய்ப்பு இவ்வலைவுகளால் நேர்ந்ததே.

வழக்குகளைத்தெளியக் கண்டாரால் தாமே வழக்குகளைத் தொகுத்துத் தமிழ் வைப்பாக்கிக் கொள்ள வாய்த்த வாய்ப்பு இவ்வலைவுகளால் நேர்ந்ததே.