உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

111

வழக்குகளைத் தெளியக் கண்டாரால் தாமே வழக்கற்ற சொற்களைப் பட்டியிட்டுக்காட்டமுடியும்! “வழக்கற்ற சொற்களை யெல்லாம் ஒரு தனிச் சுவடியாக வெளியிட இந்நூலாசிரியன் கருதுதலின் ஈண்டு மிக வேண்டிய சொற்களே காட்டப்பெறும்” என்று சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளில் சுட்டுகிறார் பாவாணர் (பக்.83).

பழமொழிகள் பதின்மூவாயிரம் தொகுத்தவர் பாவாணர். ஒரு சிறு சுவடியாகும் அளவுக்குப் பழமொழிகளைத் தம் நூலில்ஆட்சி செய்தவர் பாவாணர். பழமொழி பதின் மூவாயிரத் திற்கு ஆராய்ச்சி முன்னுரை மட்டும் 50 பக்க அளவில் வரைந்திருந்தார் பாவாணர். சேலம் திரு.சு.கு. அருணாசலம் என்பார் வெளியீட்டுப் பொறுப்பை ஏற்றிருந்தார். அதனை அவர் வெளியிடாமை மட்டுமன்றி அந்நூற் கைப்படி தானும் பாவாணர்க்கு வாராமலே ஒழிந்தது. (மி.மு.சி. 22-11-65; 2-7-66).

சிற்றூர்களிலிருந்து வரும் மாணவர்கள் மூலம் வழக்கிலுள்ள பழமொழிகளையும் திரட்டினார். அவர்களுக்குக் காசு கொடுத்தார். பழமொழிகள் பன்னீராயிரத்தையும் கடந்தன" எனப் பாவாணரின் திருச்சி மாணவர் திரு.சு. பொன்னுசாமி குறிப்பிடுகிறார் (செந். செல்வி. 55:272)

பழமொழிகள் மட்டுமோ தொகுத்தார் பாவாணர்; மரபுத் தொடர்கள் இணைமொழிகள் இன்னவற்றையும் தொகுத்தார். பாவாணர் தம்உயர் தரக்கட்டுரை இலக்கணத்தில் இணை மொழிகள் 403-ஐ அகரமுறையில்பட்டியிட்டுக் காட்டுகிறார் (பக். 25). கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கணத்தில் தொடர்மொழிகள் 221-ஐ அகர நிரலில் காட்டுகிறார். (பக்.99) தமிழ் நாட்டு விளையாட்டுக்கலையைத் தெளிந்தவர் பாவாணர்; தனி நூலாக விளங்குகிறது அது; அதில் 58 வகை விளையாட்டுகள் சொல்லப்பட்டுள. பாவணர் இசைக்கலைத் தேர்ச்சியை முன்னரே அறிந்துள்ளோம். தமிழர் திருமணம், தமிழர் சமயம்தமிழ் நாட்டு அரசியல்வழக்கு, பண்பாடு நாகரிகம், தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, வடமொழி வரலாறு இன்ன வாறான வரலாற்றுக் கலைச் சீர்ததியும் தனித்தனி நூலாகிய பெருமைய.