உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

பாவாணர் தொகுத்து வைத்திருந்த அகரமுதலி நூல்கள் ஒருபத்தா? ஒருநூறா? "பன்மொழிப் புலவர்திரு. தேவ நேயப் பாவாணர் அவர்கள் வீட்டில் எட்டு அலமாரிகளில் (நிலைப் பேழைகளில்) உலகமொழிகளிலுள்ள அகராதித் தொகுப்புகள் உள்ளன" என்கிறார் ச.வே. சுப்பிரமணியனார் (செந்.செல். 55;

275).

பாவாணர் அறிந்த மொழிகள் தாம் எத்தனை?

மலையாள இலக்கணப்புத்தகமும் Arabic English Vocobulary யும் மூர் அங்காடியில் வாங்கியனுப்பக் கோருகிறார்பாவாணர் (4-10-84).

'ஹிந்தி' பயில்கின்றேன் என்பதை 13-11-35 இல் குறிப்பிடு கிறார். Arabic grammar Hebrew grammar, Chinese self-taught & grammar ஆகியவற்றை Higgin bothams வாயிலாய்த் வருவித்துத் தர வேண்டுகிறார் (23-8-37) இதே நாளில் French grammar, German grammar என்பனவற்றையும் மூர் அங்காடியில் வாங்கித் தரவும் வேண்டுகிறார். மராட்டிய மொழி அகராதி மூர் அங்காடியில் 480 உருபா விலையில் பாவாணர்க்காகவே தரப்பட்டது.

எருதந்துறை அகர முதலி மடலங்கள் அனைத்தும் (13 மடலங்கள்) கழிவுதள்ளி 1240 உருபாவிற்கு வாங்கினார். இன்னும் பிறமொழி நூல்களும் தமிழ் மொழிப் பல்துறை நூல்களும் அவர் வாங்கியவை தனித்தனியே குறிக்கப்பட்டால் பெருவிரிவாம் என அமைவாம்.

பாவாணரின் மேலையாரியப் புலமை ஆங்கிலத் தமிழ்ச் சொற்கள் அறுநூறு என்னும் கட்டுரைத் தொடராலும் (செந். செல். 13:253; 299; 363; 418; 501; 577), வடவாரியப் புலமை வடமொழி வரலாற்றாலும் நன்கு தெளிவாம்.

"திரவிட மொழிகள் இந்திய மொழிகள், உலக மொழிகள் ஆகியவற்றில் பெரு மொழிகளாய் அமைந்த 23 மொழிகளின் இலக்கண அறிவும்பெற்றவர் பாவாணர்" என்பர் (ஊற்று; மாதிகை. 9: 11 பேரா. கு. பூங்காவனம்.

பாவாணரின் தமிழ் வரலாற்றில் குறிக்கப்படும் குறுக்க விளக்க மொழிப் பட்டியில் மொழிப் பெயர்கள் 58-உம், ஆங்கிலக் குறுக்க விளக்க மொழிப் பட்டியில் மொழிப் பெயர்கள் 17-உம்