உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

பாவாணர்

113

ஆக 75 மொழிகள் இடம் பெற்றுள. "பன்மொழி கற்கும் கூர்த்த மூளை ஒருவர்க்கு இருக்குமானால் எளிமையாய் 50 மொழிகளைக் கற்றுக் கொள்ள முடியும்" என்னும் பாவாணர், தம்மொழிக்குத் தாமே தக்க சான்றாக விளங்கினார் எனச் சாற்றலாம்.

-

சொல்லாய்வுத் தூண்டல் பாவாணர்க்கு எவ்வாறு உண்டாகியது? பள்ளியிறுதி, இடைநடுவு, கலையிளைஞர் முதலிய பல்வகைத் தேர்வுகட்கும்உரிய தமிழ்ச் செய்யுட் பாடங்கட்குத் தொடர்ந்து உரை அச்சிட்டுவரும்சில உரையாசிரியர்கள் தமது வரையிறந்த வடமொழிப் பற்றுக் காரணமாக, தென் சொற்களையெல்லாம் வடசொற்களாகக் காட்டவே இவ்வுரை எழுந்தனவோ என்று தனித்தமிழர் ஐயுறுமாறு, கலை -கலா; ஆவீறு ஐயானவடசொல்; கற்பு கற்ப என்னும் வடசொல்; சேறு - ஸாரம், என்னும் வடமொழியின் திரிவு; முனிவன்-மோனம் என்னும் வடசொல் அடியாகப்பிறந்தது; உலகு - லோக மென்னும் வடசொல்லின் திரிபு; காகம் - காக என்னும் வடசொல்; விலங்கு- திரியக்ஸ் என்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பு எனப்பலதூய தென்சொற்களையும் வடசொற்களாகத் தமது உரைகளில் காட்டி வருவது பத்தாண்டுகளுக்கு முன் என் கவனத்தை இழுத்து. உடனே அச்சொற்களை ஆராயத் தொடங்கினேன் என்கிறார் பாவாணர் (ஒம்பியன் மொழிநூல்: முகவுரை).

பாவாணர் ஆங்கிலத்திற்கும் தமிழிற்கும் பொதுவான சில ஆங்கிலச் சொற்களைக் கண்டதும், ஆங்கிலச் சொற்களுக்கு மூலமாகவோ இனமாகவோ உள்ள சில இலத்தீன், கிரேக்கச் சொற்களைக் கண்டதும் மேலும் மொழி நூற்றுறையில் ஆழ இறங்கி அரும்பணி செய்து வந்ததும் "இவரே தமிழ் மீட்பர்' என்னும் எண்ணத்தைத் தமிழ்ப்பற்றாளர்க் கெல்லாம் ஊட்டியது! அவ்வூட்டுதலே எப்புலவர்க்கும் வாயாத அளவில் பாவாணர்க்குத் தொண்டர்படை ஒன்று உருவாக ஏந்தாயிற்று எனத்திரட்டுப் பொருளாய் முடிவு செய்யலாம்! அதன் விளைவே பல்வேறு வகை உதவிகளாகவும், அமைப்புகளாகவும் கிளர்ந்தன என்க.