உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அகரமுதலித் திட்டம்

இனித் தென்மொழி வகுத்துத் தந்த செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம் குறித்துக் காணலாம். அத்திட்டமாகவே, அது தோன்றிற்றில்லை. முத்திட்டங்களுள் ஒன்றே அது. அம் முத்திட்டங்களும் இவை :

1. அரசை அணுகி அதன் வழியாக அகர முதலி வெளியிட ஏற்பாடு செய்தல்;

2. பாவாணர் நூல் வெளியீட்டுக் குழுவின் வழியாக நிறைவேற்றல்;

3. தென்மொழித் திட்டத்தின் வழியாக நிறைவேற்றல்; என்பவை அவை.

முதலிரு திட்டங்களும் வெளிப்படை; அவற்றொடு, மூன்றாம் திட்டத்தையும் தொகுத்துத் திரு. தமிழ்க் குடிமகனார் வழங்குகிறார்:

1970 திசம்பர்மாதத்திலேயே தென்மொழி வாயிலாகப் பெருஞ்சித்திரனார் ஓர் அருமையான திட்டத்தை வெளியிட்டார். அது மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி உருவாக்க வெளியீட்டுத் திட்டம் என்பதாகும்."

அரசு பாவாணரைப் புரிந்துகொண்டு அவரது அறிவைப் பயன்படுத்த முன்வாராமையால் மக்களே அந்த முயற்சியை மேற் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தி.வை. சொக்கப்பா பெருஞ்சித்திரனார் செந்தமிழ்க்கிழார், சின்னாண்டார், தமிழ்க் குடிமகன் ஆகிய ஐவர் கொண்ட குழு 1971-ஆம் ஆண்டில் தமிழக அமைச்சர் மாதவனைச் சந்தித்து வேண்டியும் ஒன்றும் நடக்கவில்லை.

எனவே, தென்மொழி இருநூறு உறுப்பினர்கள் கொண்ட ஒரு திட்டம் தந்தது. ஒவ்வொருவரும் மாதந்தோறும் உரூபா 10-00 பாவாணர்க்கு விடுத்தல் வேண்டும். இதில் பாதி (உருபா 1000)