உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

115

பாவாணர் நூலை உருவாக்கத் துணை செய்ய; மீதி ஆயிரம் பிற்காலத்தில் நூலை வெளியிட வேண்டிச் சேமித்து வைக்க என்பதாகும்.

வல்லான் வகுத்தவழி

28).

தென்மொழியில், "மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி உருவாக்க வெளியீட்டுத் திட்டம்" விரிவாக வகுக்கப்பட்டது (8-8-9; பக். 4 இத்திட்டத்தைத் தொகுத்து வல்லான் வகுத்தவழி என அத்திட்டம் இறையருளால் தோற்றுவிக்கப்பட்டது எனப் போற்றுகின்றார் பாவாணர். அதில் யான் மேம்பட்ட ஆங்கிலத் திறம் பெற்றும் "சேக்கசுப்பியரின் முப்பானே நாடகங்களையும் கற்றறிந்து கரைகண்டு எருதந்துறை ஆங்கிலப் பேராசிரியனாக அமர விரும்பினேன்.ஆனி,எதிர் பாராத சில சூழ்நிலைகளால் என் மனம் தமிழ்ப்பணிக்கு ஈர்க்கப்பட்டது" என்கிறார். அதன் நிறை வாகத், தமிழ் எதிர்காலத்தில் வாழவும் வளரவும் இன்றியமையாத பணி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் தொகுப்பே யாதலாலும் இதை என்னையன்றி வேறெவரும் செய்ய இயலாதாகையாலும் எனக்கு வரவர மூப்பு மிகுவதாலும் தமிழன்பரான பொது மக்களின் உதவிகொண்டு இப்பணியை இன்னே செய்ய உ.த.க. பொதுச் செயலாளர் பாவலர் பெருஞ்சித்திரனார் தாம் வகுத்திருக்கும் திட்டத்தை உடனே செயற்படுத்த என் முழு இசைவையும் இதனால் தருகின்றேன். எல்லாம் வல்ல இறைவன் வகுத்த வழி இதுவேயாகும் என்கிறார் (1 சுறவம் 2002; தென் மொழி).

தென்மொழி வகுத்த திட்டத்தின் வகையில் இருநூறுக்கும் ற்ேபட்ட உறுப்பினர்கள் சேர்ந்தனர். தொகையும் விடுத்து வந்தனர். பாவாணரும் ஊக்கமாக வேலை செய்யத் தொடங்கினார். "திட்டகாலம் 12-2-71 முதல் 29-2-76 முடிய என்று வரையறுக்கப் பட்டது, அகரமுதலி வெளியீட்டுக்கு உதவும் உறுப்பினர் இருநூற்றுவர் பட்டியல் 1. தாமரை பெருஞ்சித்திரன், கடலூர் - 1 எனத் தொடங்கி 200. ந.வெ. பெருமாள் அறி. இ. புதுவை - 1. எனத் தென்மொழி சுவடி 9. ஓலை 11 இல் (பெப். மார்ச்சு 1972) வெளியிடப்பட்டது. அவர்கள் அனைவரும் பாராட்டுக் குரியர்; தாமே தேடிவந்துதவிய தனித்தமிழ்த் தொண்டர்கள் அவர்கள். ஆயினும், ஒரு முறை இரு முறை என ஒரு பெருந்தொகை தரவல்ல உள்ளமுடையார்க்கும், தொடர்முறையாக உதவிவருதல் இடர் முறையாகவே அமைந்து விடுதல் உலகியல்! கண்கூடாகக் காணும்