உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

நடைமுறையுமாம். அதனால் படிப்படியே எண்ணிக்கை சுருங்கு வதாயிற்று.விடுத்தாரும் இடையறவு பட்டு விடுதலும், உண்டாயிற்று. மேலும் ஓர் இடரும் தலை காட்டியது. திட்ட உறுப்பினருள் சிலரும் பலரும் அகரமுதலி வேலை நடப்புப்பற்றி வினவவும் ஐயங்கிளத்தவும் தொடங்கிவிட்டனர். அதனால், செ.சொ. பி.அ. திட்ட அறிக்கை ஒன்று பாவாணரால் விடுக்கப்பட்டது (தென்மொழி 10; 2 - 4; பக். 8)"

1. உறுப்பினர் இனிமேல் அடிக்கடி அகரமுதலித் தொகுப்பு வேலை நடப்பைப்பற்றி வினவிக் கொண்டிருக்க வேண்டிய தில்லை. வடமொழியினின்று தமிழை மீட்பதே ஆசிரியன் வாழ்க்கைக் குறிக்கோள், அதற்குத் தலை சிறந்த கருவி செ.சொ. அகர முதலியே. இது வரையிலும் வேறு எம்மொழியிலும் வெளிவராத வகையிலும் தமிழிலும் வேறு எக்குழுவாலும் தொகுக்க முடியாத வகையிலும் அது பன்னிரு மடலமாக வெளிவரும்.

து

2. இது ஐயாட்டைத் திட்டமாகையால், ஐயாண்டு கழிந்தபின் வினவுக.

3.ஐயாண்டு முடியுமுன்னரே முதன்மடல் அச்சு வேலை தொடங்கும்.

இவற்றொடு மேலும் மூன்று குறிப்புகளும் அவ் வறிக்கையில் தந்துள்ளார் பாவாணர்.

பன்னிருமடல் அமைப்பு முறையும் தென்மொழியில் விளக்கமாகத் தரப்பட்டுள்ளது (சுவடி 10. ஓலை 10. பக், 59 - 60). முதன்மடலம்: முதற்பகுதி - அ, ஆ

2உ-ஆம் பகுதி -இ,ஈ,

3. ஆம் பகுதி -உ, ஊ

4 - ஆம்பகுதி - எ, ஏ, ஐ.

5 - ஆம்பகுதி - ஒ, ஓ, ஒள.

(இவ்வாறே தொடர்ந்து எட்டு மடலங்கள்)

ஒன்பதாம் மடலம்: பிற்சேர்ப்பு (Supplement)

பத்தாம் மடலம்: செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் நெறிமுறைகள் (Principles of the Tamil Etymology)