உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

117

பதினொன்றாம் மடலம் : தமிழ் அகர முதலி வரலாறு (History of Tamil Lexicography)

பன்னிரண்டாம் மடலம் : முகவுரை, முன்னுரை, செ.சொ. அகரமுதலியமைப்பு விளக்கம், மேற்கோள் விளக்கம், செ. சொ. அகரமுதலித் திட்டம், செ. சொ.அ.உறுப்பினர் விளக்கம் முதலியன

குறிப்பு : முதல் எண் மடலங்களிலும் விடுபட்டுப் போன இருவகை வழக்குச் சொற்களும் சிறப்பாகத் தமிழகத்திலும் மலையாள நாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் வழங்கிவரும் உலகவழக்குத் தமிழ்ச் சொற்கள், பிற்சேர்ப்பு மடலமாக வெளிவரும். முதன் மடலம் முதற் பகுதி இவ்வைந்திர (பஞ்சாங்க) ஆண்டிற்குள் அச்சிடப்படும். அதன்பின் ஏனைப்பகுதிகளும் தொடரும்.

இவை அகரமுதலி அமைப்பு விளக்கம் பற்றிய அறிக்கைச்

செய்திகள்.

அகரமுதலிப்பணியில் ஆழ்ந்த பாவாணர்க்குப் பல்வேறு அகரமுதலிகளும் மாந்தவியல், திணையியல், தொல்லியல் தொடர்பான நூல்களும் தேவைப்பட்டன. தாம் தனிப்பட எழுதியும் வெளியிட்டும் ஓராற்றான் வாழ்க்கையை நடாத்த உதவிய நூற்பணி நின்று விட்டது. நூல் வெளியீட்டு உதவிகளுக்கும் ஓர் எல்லை தானே! தனிப்பட்ட அன்பர்கள் ஆர்வலர்கள் அமைப்புகள் ஆகியனவும் இயன்ற அளவான் உதவவே செய்தன! எனினும் “எல்லாம் ஒரு கால எல்லைக்கே” என்னும் நியதியே நியதியாயிற்று. பாவாணர் பெயரால் பணந் தண்டினோரும் தம்முடையமை யாக்கவும் தலைப்பட்டு விட்டமையும் அறிகிறார் பாவாணர்! தம்மிடம் நூல்கள் வாங்கிப்பணம் தாராமல் ஏமாற்றுவாரையும் காண்கிறார் பாவாணர். ஆதலால் முழு ஊன்றுதலும் அகரமுதலிக்கே என்னும் நிலைமை தளர்கின்றது. பாவாணர்க்குப் பலப்பலரும் பணவுதவி செய்வதால் அரசுதவி தேவை இல்லை என்று பரப்புநரும் உருவாகி விட்டனர்.

'தமிழ்ப்பற்றில்லாத அல்லது தமிழ்ப்பகைவனான ஒருவன், பலர் எனக்குப் பணவுதவி செய்வதாகவும் அரசுதவி தேவை யில்லை என்றும் சொன்னதாகத் தெரிகின்றது. காலும் அரையுமாக ஏழைமக்கள் எனக்குக் கொடுக்கும் பணம் பனிபெய்வதும் சிறுதூறலும் போன்றது. அரசு தமிழைக் காக்கவும் வளர்க்கவும் கடமைப்பட்டுள்ளது. பரிசுச் சீட்டுப்பணம் குன்று போற்