உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

குவிகின்றது. அகரமுதலிக்கு ஒரிலக்கம் ஒதுக்குவது மிகமிக எளிது" என்கிறார் பாவாணர் (12-11-70 ; தி.வை. சொ.).

இந்நிலையில் அகரமுதலித்தொகுப்பும் ஆய்வும் விரைந்து நிகழாவிடினும் ஓரளவான் நடந்து வருதல் அறியமுடிகின்றது.

"செ. சொ.பி.பே.அ.வேலை தொடங்கி விட்டேன். பு. பு. பட்டிக்கொந்தில் மட்டும் வழங்கும் சிறப்புத்தமிழ்ச் சொற்களைப் பொருளுடன் எழுதி விடுக்க. ஓராண்டிற்குள் விடுத்தாற் போதும்" எனப் புன்செய்ப் புளியம் பட்டி மறை மலையடிகள் கள் மன்ற கா. இளமுருகனார்க்குப் பாவாணர் எழுதுகின்றார் (8-3-71) இவ்வாறே பிறவட்டாரத் தொகுப்புகளிலும் பாவாணர் கருத்துச செல்கின்றது. "முதன்மடலம் முதற்பகுதி வெளியிடவும் பன்னீராயிரம் உரூபா வேண்டும். பணமனுப்பும் உறுப்பினர் தொகை 160-இலிருந்து வரவரக்குறைந்து இன்று நாற்பதாக உள்ளது. ஆகவே அரசின் உதவி இன்றியமையாதது.' என்கிறார் (கா.இ.மு.22-1-74).

திருவாரூரில் திரு.வி.க. படிவத்திறப்பு விழா நிகழ்ந்தது. திருவாரூர் இயற்றமிழ்ப் பயிற்றகஏற்பாட்டில் நிகழ்ந்த அந் நிகழ்ச்சிக்கு முதல்வர் அருட்செல்வர் (கருணாநிதியார்) சென்றிருந்தார்.அம்மேடையில் பாவாணர் பொழிவும் நிகழ்ந்தது.

அதனைப்பற்றிப் பாவாணர், "திருவாரூரில் நான் முதலமைச்சரைக் கண்டு பேசவில்லை. மேடையில் அரைமணி நேரம் சொற்பொழிவாற்றினேன். அதன்பின் முதலமைச்சர் உரை நிகழ்த்தும்போது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலிக்கு ஈரிலக்கம் ஒதுக்குவதாகச் சொன்னார். அது என்று எவ்வழி எவ்வாறு என்பது இன்னும் தெரியவில்லை" எனக் கழக ஆட்சியாளர்க்கு எழுதினார் பாவாணர் (வ.சு; 3-1-74) படிமத்திறப்பு 2-12-73 இல் நிகழ்ந்தது. 8-5-74 இல் பாவாணர் இயக்குநராக அமர்த்தம் பெற்றார்.

CC

றைவனருளால் நான் தமிழ்நாடு அரசால் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்குநராக (Director) 1500 உருபாச் சம்பளத்தில் நாலாண்டிற்கு அமர்த்தப்பட்டுள்ளேன் என எழுதுகிறார் பாவாணர் (சு. பொ; 9-5-74). மேலும், நான் இறைவனை நம்பியிருந்தவாறே, மிகப்பிந்தியேனும்தமிழுக்கு நற்காலம் கிட்டிற்று. இதுமுற்றும் தவத்திருக் குன்றக் குடியடிகளின் தனிப்பெரு முயற்சியின் விளைவாகும் என்கிறார் (மு.வ.ப; 28-5-74).