உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

119

அரசு இயக்குநராக அமர்த்தியும் உடனடியாக அலுவலகம் தரவில்லை; பணி உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆயோர் அமர்த்தம் ஆகவில்லை. ஏறத்தாழ முத்திங்கள் கழித்துப்பாவாணர் வரையும் மடலால் துறைக் கிருந்தநிலை வெளிப்படுகின்றது.

"செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம் தி.மு.க. அரசு இதுவரை செய்துள்ள தமிழ்த் தொண்டுகளுள் தலை சிறந்தது. அது திரு. அருட் செல்வனார் ஆட்சியை நிலைப் படுத்துவது மட்டுமன்றி நாளடைவில் தமிழ்நாடு முழு விடுதலையடையவும் வழிகோலும்."

"நான் விரும்பியவாறே திரவிடச் சொற்றொகுக்கவும் தமிழிலக்கியச் சொற்றொகுக்கவும் தலைசிறந்த உதவிப்பணியாளர் இருவர் அமைந்ததும் பெருமகிழ்சசிக்குரிய செய்தியாகும்."

ஆயினும் இத்திட்டத்தையேற்படுத்தி நான்கு மாதமாகியும் இன்னும் அலுவலகத்திற்கு இடம் ஒதுக்காமையும் மேற்குறித்த இருவரையும் அமர்த்தாமையும்மிக வருந்தத்தக்க செய்தியாம்.

மேலும், இத்திட்டத்தைச் சட்டசபையில் உறுதிப் படுத்திய பின்னரே என்னையும் கீழ் நிலைப்பணியாளரையும் அமர்த்தி யிருத்தல் வேண்டும். அது செய்யாமையால் இன்னும் எனக்கும் பிறர்க்கும் சம்பளம் வரவில்லை.

மாதந்தொறும் உண்டிக்கு 150 உரூபாவும்வீட்டு வாடகைக்கு 65 உரூபாவும் செலவாகின்றது.

தென்மொழித் திட்ட உறுப்பினர் இருநூற்றுவருள் அறுபதின்மர் முதலாண்டே விலகிவிட்டனர். நாலாம் ஆண்டில் முப்பதின்மர் பணம் விடுத்து வந்தனர். அரசு இத்திட்டத்தை ஏற்றபின் அம்முப்பதின்மருள்ளும் பதினைவர்நின்று விட்டனர். கடன் வாங்கிச் செலவு செய்யும் நிலைமையும் நீடித்தல் அரிது.

இன்று நடைபெறும் சட்டசபைக் கூட்டத்தில் இடஒதுக்கம், இருவர் அமர்த்தம், சம்பளக்கொடுப்பேற்பாடு, என்க்கு இயங்கி உதவல் ஆகிய நான்கும் முடிபு செய்யப் பெறுமென்று எதிர் பார்க்கப்படுகின்றது.

சம்பளக் கொடுப்பேற்பாடு செய்யப் பெறினும் அடுத்தமாத இறுதியில்தான் அது கிடைக்கும் - இச் செய்திகள் திருச்சி ந. பிச்சுமணியார்க்கு 17-8-74 இல் எழுதப்பெற்ற அஞ்சல்வழி அறியும் செய்திகள்.