உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

பாவாணர்க்கு ஆயிரம் ஆயிரமாக நூல்கள் வேண்டும் தேவை. பன்மொழி அகரமுதலிகள், கலைக்களஞ்சியங்கள், திணை நூல்கள் வேண்டும். ஆனால் ஆண்டுக்கு உரூபா 200 நூல் வகைக்கு ஒதுக்கப் பட்டது! சம்பளம் வாங்க வாங்க தம்கைப்பணம் செலவிட்டு நூல்வாங்கினார்

காலமெல்லாம் அந்நிலையே நீடித்தது.

பாவாணர்.

அவர்க்கு ஒதுக்கப்பட்ட அலுவலகம் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. அலுவலக இடங்கள் பற்றிய குறிப்பை விரிக்க வேண்டுவதில்லை. பாவாணர்மறைந்த காலையில் செந்தமிழ்ச் செல்வியில்வந்தகுறிப்புகள் சிலவற்றைப் பொறித்தல் சாலும!

உலகத்தின் முதன் மொழியாகிய தமிழ் மொழியின் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தையும் அதன் இயக்குநர் மேதகு பாவாணரையும் நினைத்ததும் அரசு, அவ்வியக்கத்திற்கு அளித்த அலுவலகச் சிறப்புப் பற்றி எத்தனை கற்பனைகள் நம் நெஞ்சில் விரிந்து எழும்! இஃது இயற்கை!

வானோங்கி உயர்ந்தவளமாளிகை! அகன்ற பரப்பு! திறந்த புல்வெளி! சிறந்த இயற்கைச்சூழல்! வனப்பு மிக்க அறைகள்! வாய்ப்பான இருக்கைகள்! தேடிப்பெறுதற்கரிய திருவாம் நூற்குவைகள்! அலுவலகப் பணியாளர்கள்! அறிவுத் துணைகள்! ஏந்து வாய்ப்புகள்!-இன்னவெல்லாம் நெஞ்சத்தில் பளிச்சிடு கின்றன! ஏனெனில் தமிழறிந்த தகவுடைய தமிழமைச்சர்களே முதல்வராகவும் துணைவராகவும் தமிழகத்தை ஆட்சிபுரியும் தனிப்பெரும் சீர்த்தியமைந்த காலத்தில் அன்றோ இயக்ககம் உருவாகியது! அதிலும், கல்வித்துறையமைச்சரும் நிதித் துறையமைச்சருமாகியவர்-தமிழ் நாவலர் - நடமாடும் பல்கலைக் கழகம் - எனப் பாராட்டப் பெறுபவர் அல்லரோ! இந்நிலையில் தமிழ் அன்பர்களும் தமிழ்ப்பற்றாளர்களும்இயக்கக வளமைபற்றி எண்ணி இறும்பூது அடையாமல்இருப்பரோ? ஆனால் நிகழ்ந்தது

என்ன?

அகர முதலி இயக்கத்திற்கு அரசால் தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனத்தில் 12' X 6' அளவில் ஓர் அறை கொடுக்கப்பட்டது.

உலகளாவிய தமிழன்னை வீற்றிருக்க ஒருமேசை! ஒரு நாற்காலி! பணி செய்ய ஒரு தொண்டர் -போது மல்லவோ! சின்னஞ்சிறு சங்கப் பலகையிலே வீற்றிருந்த செந்தமிழ் அன்னைக்கு இப்பேரிடம் போதாதோ?