உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

121

பாவாணரின் அகரமுதலி இயக்ககம், பல்கலைக் கழகப் பக்கமும் பார்த்தல் ஆகாது! தமிழ்வளர்ச்சித் துறையை நெருங்கவும் தகாது! ஆட்சிமொழித் துறையை அணுகவும் ஆகாது! உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை ஒட்டவும் கூடாது! கல்வித்துறை இயக்கங்களைக் காணவும்தகாது! புதுவதாகக் கட்டப்பெற்ற எந்தஅரசு மாளிகையிலும் புகுதலும் பொருந்தாது. அங்கெல்லாம் அகரமுதலி இயக்ககத்தை வைக்க இடமில்லை! அறவே இல்லை! ஏனெனின், இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டும் இறையும், இருந்தமிழே உன்னால் இருந்தேன் என்னும் தமிழ்ப்பற்றும் இருந்தபடி இருக்கத் தானே வைக்கும்! அதையே செய்தது!

ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம்; மூவர் நிற்கலாம்- என்னத்தக்க அறையில்தமிழ்த் தாயின் அகரமுதலி இயக்ககம் தனிக்கோலோச்சத் தொடங்கியது. தட்டச்சும் சுருக்கெழுத்தும் பயின்ற ஒருவர் அலுவலகத் துணையாய் அமர்த்தமாகி ஆங்கு வேலை இன்மையால் (அவர்க்கு இருக்கவும் இடமும் இன்மையால்) வேறுபணிக்கு மாற்றவும் பெற்றார்.

-

என

"நாலாண்டில் நிறைவிக்க வேண்டியபணி ஆணையிடப் பெற்ற அமைப்புக்கு நாலாம் ஆண்டின் இறுதியிலும் ஏன் இன்று வரையிலும் (1981) வேண்டும் வாய்ப்புகளை உருவாக்கித் தரவில்லை. அதன் பணி நிறைவேற்றத்தைப் பகரவும்

தம் இயக்கக நிலையைப் பல்கால் அரசுக்கு எழுதினார் பாவாணர், அதன்பின் கன்னிமாரா நூல்நிலைய வளாகத்தில் ஓரிடத்தை அரசு ஒதுக்கித்தந்தது... கன்னிமாரா நூலகம் உலகப்புகழ்வாய்ந்த தாயிற்றே! அகரமுதலிப்பணிக்கு மூல வைப்பகமாக இருந்து முழுவுதவி புரியுமே! காலம் கழித்தேனும் அரசு கருத்துடன் கடனாற்றியிருக்கிறது என்னும் களிப்பு மேலிடும் பைந்தமிழ்ப் பற்றாளர்க்கு! இஃது இயற்கை தானே!

கொடுக்கப்பட்ட இடம் கன்னிமாரா நூலகப் பகுதியன்று; அதன் காற்றுப்படவும் கனிந்து இடம் தரலாமா? நூல் நிலையத்திற்கு எட்டத்தில் தென் மேற்குக் கடைகோடியில் ஓர் ஓட்டை ஓட்டுக் கட்டம் ஒதுக்கப் பட்டது. புதர்ச் செடிகளுக்கு இடையே அமைந்த அந்தக் கட்டடத்தின் தளம் பழுது! ஓடு ஒழுகல்! தடுப்பற்ற ஒரு நெட்டறை.