உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

123

உருபா ஒருகோடி வழங்கியுள்ளது. பல்கலைக் கழக நல்கைக்குழு (U.G.C.) மராத்திய நாட்டு அரசு, பூனாப் பல்கலைக்கழகம் ஆகியவை பெருந்தொகை வழங்கியுள்ளன. ஒன்றிய நாட்டினங் களின் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பகம் (UNESCO) அச்சீடு முடியும் வரை ஆண்டுதோறும் பெருந்தொகை வழங்க சைந்து உள்ளது. பாரிசு சமற்கிருதக் கழகம் உருபா இரண்டு கோடிக்கு மேலும் வழங்கியுள்ளது.

மலையாள அகரமுதலி:

1953-இல் தொடங்கப் பெற்றது இவ்வகர முதலிப் பணி. பன்னீராண்டுகளுக்குப்பின் 1965 -ஆம் ஆண்டில் முதன் மடலமும் (அ) 1970 -ஆம் ஆண்டில் இரண்டாம் மடலமும் (ஆ-ஔ) 1976 - ஆம் ஆண்டில் மூன்றாம் மடலமும் (க-கீ) வெளிவந்துள்ளன. பணி தொடர்கின்றது. நிலையாக 36 பேர்கள் பணியாற்றுகின்றனர். கேரள அரசு, கேரளப் பல்கலைக் கழகம் இவற்றின் இணைந்த அரவணைப்பில் இயல்கின்றது.

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகர முதலி :

1905-ஆம் ஆண்டு இவ்வகர முதலிப் பணி தொடங்கியது. 1931-ஆம் ஆண்டு இறுதியுடன் முடிந்தது. ஆக மொத்தம் 26 ஆண்டுகள் பணி நிகழ்ந்தது. நிலையாக இருந்து பணி செய்தவர் அறுவர். இடை இடை அமர்ந்து பணி செய்தவர் இருவர் மூவர். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைப்பணியாளர் உதவுதலும் உழைப்பும் ஒன்றி இருந்தன.

எடுத்துக் காட்டாகக் கூறப் பெற்ற இவற்றுடன் பாவாணர் செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகர முதலிப் பணிக்குக் கிடைத்த உதவியையும் ஒப்பிட்டுக் காணல் வேண்டும். அன்றியும் பாவாணர் அகர முதலிப்பணியின் தனிப்பெருஞ் சிறப்பையும் ஒப்பிட்டு அறிதலும் வேண்டும்.

பாவாணர் அகர முதலியின் தனித்தன்மைகள் ;

1. இந்நாள் வரை வெளிவந்துள்ள தமிழ் அகர முதலிகளிலெல்லாம் இல்லாத எல்லாச் சொற்களையும் இயன்றவரை எடுத்துக்காட்டிப் பொருள் கூறுதல்.

2. ஏனை அகர முதலிகளிலுள்ள தவறான சொல் வடிவங்களைத் திருத்துதல்.

3. ஏனை அகர முதலிகளிலுள்ள சொற்களுக்கு விடுபாடுள்ள பொருள்களையெல்லாம்இயன்றவரை எடுத்துக் கூறுதல்.