உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

4. ஏனை அகர முதலிகளிலுள்ள தவறான பொருள்களைத் திருத்துதல்.

5. எல்லாப் பொருள்களையும் ஏரண முறைப்படி (தருக்க முறைப்படி) வரிசைப்படுத்திக் கூறுதல்.

6. எல்லாச் சொற்களுக்கும் இயன்றவரை திரவிட ஆரிய இனச் சொற்களைக் காட்டுதல்.

7. எல்லாச் சொற்களுக்கும் இயன்ற வரை வேருடன் கூடிய வரலாறு வரைதல்

8. ஏனை அகர முதலிகளிற் குறிக்கப்பட்டுள்ள தவறான மூலங்களைத் திருத்துதல். இவ்வெட்டுவகைத் தனித் தன்மை களையும் கொண்டது பாவாணர் அகரமூதலி. அதன் பயன்களும்

பலவாம்.

செந்தமிழ்ச் சொற்களுக்குச் சொன்மூலம் மட்டுமன்றிச் சொன் மூலத்திற்கு மூலமான ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் மூலங்களும் காணலாம். தமிழ் மொழியில் இருந்து உலக மொழிகளுக்குக் கிளைத்துச் சென்ற இனமொழி மூலங்களும் காணலாம். அவற்றுக்குரிய சொற்பிறப்பியல் நெறியீடுகளை வகுத்துக் காட்டுதலை அறியலாம். சமற்கிருதம் உள்ளிட்ட இந்து ஐரோப்பிய மொழிகள் சீனம் சப்பானியம் மங்கோலியம் ஆப்பிரிக்கம் ஆத்திரேலியம் முதலிய மொழிகளின் அடிப்படைச் சொல்வளத்தில் தமிழ்ச் சொற்களின் வேர் அமைந்துள்ளமையைத் தெரியலாம். செந்தமிழ்ச சொற் பிறப்பியல் ஒரு தனிமடலமாக வெளிவருதலால் அந்நெறி முறைகளைத் தெளியலாம். இந்த அகர முதலிகளுக்கு வழிகாட்டியாகவும், உலக மொழிகளின் தாய், தமிழ் மெழியே என்பதை அறிவியல் முறையில் நிறுவிக் காட்டுவதாகவும் இருத்தலால் மகிழலாம். பாவாணர்க்கு முழுதுற உதவிபுரிந்து இதனை ஒருங்கே எய்தும் பேறு தமிழுலகுக்கு இல்லாமல் ஒழிந்தது.

ஓரிலக்கம் இருப்பினும் அகரமுதலித் திட்டத்தை முடிக்கலாம் எனக்கருதியிருந்த பாவாணர்க்கு ஈரிலக்கம் ஒதுக்குவதாகக் கூறினாரே முதல்வர் அருட்செல்வர் (கருணாநிதியார்).

66

'என் வாழ்க்கையில் இதுவரை வீடுகட்ட இயலவில்லை. திரு. கருணாநிதியார் உதவியால் (என்பதவியால்) பதின் மூவாயிரத்திற்கு மனைநிலம் வாங்கவும், நாற்பதினாயிரம் வைப்பத்தில் இட்டுவைக்கவும் இயன்றுள்ளது. எனக்குச் சொந்த வீடிருந்தால் வேனில் உட்பட ஆண்டு முழுதும் இருமடங்கு வேலை செய்யலாம்" என்று ஒரு முறைக்கு இருமுறை பேராசிரியர்